fbpx

’இந்தி தேசிய மொழி’..!! ’அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்’..!! தமிழ்நாட்டு பெண்ணிடம் அடாவடி செய்த சிஐஎஸ்எப் வீரர்..!!

கோவா விமான நிலையத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் பயணியிடம், இந்தி தெரியாத காரணத்தால் கேலி செய்யும் வகையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவா விமான நிலையத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணிடம் இந்தி தெரியாதா என கோபப்பட்டு பேசிய மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் ஒருவர், இந்தி தேசிய மொழி என்றும் இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் எனவும் பேசியுள்ளார்.

சென்னையை சேர்ந்தவர் ஷர்மிளா ராஜசேகர் (வயது 34). கோவாவில் சுற்றுலா சென்றுவிட்டு தனது 3 வயது மகளுடன் சென்னை திரும்பிய இவர், லக்கேஜ் தாபோலிம் விமானநிலையத்தில் செக்கிங்கிற்காக வரிசையில் நின்றிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்று கொண்டிருந்த மத்திய தொழில்படை பாதுகாப்பு வீரர் மற்றொரு டிரேவை எடுக்குமாறு இந்தியில் கூறியுள்ளார். ஆனால், இந்தியில் கூறியதால் ஷர்மிளாவுக்கு புரியவில்லை.

பின்னர் சி.ஐ.எஸ்.எப் வீரரிடம் தனக்கு இந்தி தெரியாது என்று சொல்லியிருக்கிறார். உடனே ஷர்மிளாவை கேலி செய்த பாதுகாப்பு படை வீரர், எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வருவதாக ஷர்மிளா பதில் அளித்துள்ளார். உடனே குறுக்கிட்ட அவர், தமிழ்நாடு இந்தியாவில் தானே உள்ளது. இந்தி என்பது தேசிய மொழி, எனவே கண்டிப்பாக அதை கற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார்.

எனினும், இந்தி என்பது தேசிய மொழி கிடையாது. அலுவல் மொழி மட்டுமே என ஷர்மிளா கூறியுள்ளார். இது குறித்து ஷர்மிளா கூறுகையில், நான் நடத்தப்பட்ட விதம் மிகவும் மனிதாபிமானமற்றது. கலாச்சார ரீதியாகவும் உணர்வுபூர்வமற்றது” என்று கூறியுள்ளார். கோவா விமான நிலையத்தில் தமிழ்நாட்டு பெண்ணிடம் தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது” என்றும், “இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் பாதுகாப்புப் படை வீரர் கூறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

2024 பாராளுமன்றத் தேர்தல்.! பாஜகவை வீழ்த்துமா இந்தியா கூட்டணி.? கருத்துக் கணிப்பை வெளியிட்ட அமெரிக்க நிறுவனம்.!

Thu Dec 14 , 2023
பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க போகும் கட்சி எது என்பது தொடர்பான கணிப்பை அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான என்டிஏ கூட்டணி […]

You May Like