கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையாரை போலீசார் கைது செய்தனர்.
நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை பாரதிய ஜனதா கட்சியினர் செலவழிக்காமல் வைத்து விட்டார்கள். அதற்கு, நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நயினார் நாகேந்திரன் கட்சிக்காரரைப் பார்த்து ரூபாய் கொடுக்கவில்லை எனவும், அவரது சொந்தக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஒரு தனி டீமாக அமைத்து அதன் மூலம் தான் பணம் விநியோகம் செய்யப்பட்டது.
சொந்தக்காரர்கள் கட்சி உறுப்பினர்களை மதிக்கவில்லை, கலவரம் பண்ணினால் தான் தமிழகத்தில் காலூன்ற முடியும் என இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையார் பேசி ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. நயினார் நாகேந்திரன் தோல்வி குறித்து கலவரத்தை தூண்டும் விதமாகவும், இரண்டு சமூகத்தினர் இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தும் விதமாகவும் பாஜக மாவட்ட தலைவர் தமிழ்செல்வனும், இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் உடையாரும் செல்போனில் பேசிய ஆடியோ வைரலான நிலையில், பாஜக மாவட்ட தலைவருடன் போனில் இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையார் பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில், கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையாரை கைது செய்தனர். இதையடுத்து, அவரை கட்சியிலிருந்து அக்கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.