கோவில்களின் நகரமான அயோத்தி குழந்தை ராமரை வரவேற்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று நண்பகல் 12:20 தொடங்கி 12:59 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்று ராம் லாலா சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கிறார். ஸ்ரீ லட்சுமிகாந்த் தீக்ஷித் தலைமையிலான 121 மத குருமார்கள் மந்திரங்களை முழங்க கும்பாபிஷேகம் மற்றும் சிலை பிரதிஷ்டை நிகழ்வு கோலாகலமாக தொடங்க இருக்கிறது.
இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் சிறப்பு விரதம் இருந்து இன்று காலை அயோத்தி நகர் வந்தடைந்தார் . மேலும் இந்த நிகழ்ச்சிக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் சிறப்பு அழைப்பாளர்களும் ராமர் கோவிலுக்கு வருகை புரிந்தனர். விழாவிற்கு வருகை புரிந்த ஸ்ரீராமரின் பக்தர்களுக்கு திலகமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி கௌதம் அம்பானி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரம் ராமர் கோவிலுக்கு வருகை புரிந்தனர்.
மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்த பாலிவுட் பிரபலமான இசையமைப்பாளர் அனுமாலிக் முதல்முறையாக ராமர் கோவிலை கண்டதும் என் கண்கள் உணர்ச்சிவசத்தால் கலங்கினா என தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த பாலிவுட் பிரபலம் அனுபம் கேர் காஷ்மீர் இந்துக்களின் பிரதிநிதியாக ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார் . பாலிவுட் பாடகர் சோனு நிகம் ராம் சியா ராம் பாடலை பாடினார். ராம் லாலா சிலையை வடிவமைத்த சிற்பி அர்ஜுன் யோகிராஜ் இந்த உலகிலேயே பாக்கியம் பெற்ற மனிதர் நான் தான் என தெரிவித்திருக்கிறார்.
அபிஜித் முகூர்த்தம் மிருகசிர்ஷா நட்சத்திரம் அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வர்த சித்தி யோகம் ஆகியவை ஜனவரி 22 ஆம் தேதி நிகழ இருப்பதால் ஜெய் ஸ்ரீ ராமரின் பிறப்பை குறிப்பதாக வேத இதிகாசங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பிரதாயத்தின் அடிப்படையில் ஜனவரி 22 ஆம் தேதி 12:20 முதல் 12:59 மணி வரை ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சிலை பிரதிஷ்டை சிறப்பு நேரமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அயோத்தி நகருக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ராமஜென்ம பூமி வந்தடைந்து ராமர் கோவிலுக்கு வருகை புரிந்தார். கும்பாபிஷேகம் மற்றும் சிலை பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள் கோலாகலமாக தொடங்கியது.