fbpx

காதலியின் ஆசைக்காக கோயில் கட்டி வழிபட்டு வந்த ராஜேந்திர சோழன்.! இக்கோயில் எங்கு அமைந்துள்ளது.!?

பொதுவாக இந்தியாவில் காதல் சின்னம் என்றாலே அது ஷாஜகான் மும்தாஜிற்காக கட்டிய தாஜ்மஹால் தான் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் நம் தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பாக தன் காதலியின் ஆசைக்காக கட்டிய கோயில் குறித்து கேள்வி பட்டுள்ளீர்களா? இக்கோயில் எங்கு அமைந்துள்ளது என்பதையும், கோயிலின் வரலாறையும் தெளிவாக பார்க்கலாம்?

கடாரத்தை வென்றவர் என்ற பெயர் பெற்ற ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன், கிபி 1012 ஆம் வருடம் முதல் கிபி 1044ஆம் வருடம் வரை மன்னராக இருந்து வந்தார். அப்போது திருவாரூரை சேர்ந்த ஆடலழகி ஒருவருக்கும் ராஜேந்திர சோழனிற்கும் காதல் ஏற்பட்டது. பாடல், ஆடல் மட்டுமல்லாது தெய்வப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் தான் ராஜேந்திர சோழனின் காதலி பரவை நங்கையார்.

சோழ வரலாற்றில் ராஜேந்திர சோழனுக்கு என்று தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் ராஜேந்திர சோழனின் பட்டத்தரசியை விட இவரின் காதலி பரவை நங்கையாருக்கு ராஜேந்திர சோழனின் இதயத்திலும், அவரின் ஆட்சியிலும் மிகவும் சிறப்பு கிடைத்துள்ளது. ராஜேந்திர சோழனின் மகன்கள் தன் தந்தையின் காதலியான பரவை நங்கைக்கு திருமேனி எடுத்து வழிபாடு செய்துள்ளனர் என்றால் அந்த அளவிற்கு ராஜேந்திர சோழனின் ஆட்சியில் பரவை நங்கை சிறப்பு வாய்ந்தவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருவாரூரில் அமைந்திருந்த தியாகேசர் என்ற செங்கலால் அமைந்த கோயிலை கற்கோயிலாக மாற்றியமைக்க பரவை நங்கையார் விரும்பியதால் கிபி 1028ஆம் வருடம் ஆரம்பித்து கிபி 1132ஆம் ஆண்டு கட்டி முடித்துள்ளனர். பரவை நங்கையாரின் விருப்பத்தின் பேரில் கட்டப்பட்ட இக்கோயிலில் அவரின் சிலை வடிவமைக்கப்பட்டு தினமும் ஆராதனை செய்வதற்காக தன் நிலங்களை மக்களுக்கு இலவசமாக அளித்துள்ளார் ராஜேந்திர சோழன். இன்று வரை ராஜேந்திர சோழனின் காதலி பரவை நங்கையாரின் சிலை பூஜை செய்யப்பட்டு ஆராதனையும், அர்ச்சனையும் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Baskar

Next Post

மதுரையில் பரபரப்பு...! பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.. போலீசார் தீவிர விசாரணை...!

Thu Feb 15 , 2024
மதுரையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பாஜக நிர்வாகி சக்திவேல் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சக்திவேலை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் எனக்கு பதிவு செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர். சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக […]

You May Like