fbpx

ஜாலி…! 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…! ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள 1முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ‌.

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர் போன்ற பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு கனமழை பெய்தது. அதன் காரணமாக 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக மழை பெய்தது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள 1முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மழை நீர் வெளியேற்றும் பணிகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவிள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிவிப்பில்; சீர்காழி பகுதிகளில் உள்ள பள்ளிகள் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. மேலும் சில பள்ளிகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் சீர்காழி தாலுகாவில் உள்ள 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, இன்று மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. மற்ற மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

#உடல் நலம் : வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சக்கரை வள்ளிக்கிழங்கு..!

Fri Nov 18 , 2022
மனிதனின் பெரிய வேலையாக நினைப்பது வயிற்றில் உள்ள ஒட்டு மொத்த கழிவும் அகற்ற வேண்டும் என்று தான். அதற்கு இந்த ஒரு சக்கரவள்ளி கிழங்கு போதும்.  தேவையான பொருள்கள் :மிளகு, சர்க்கரைவள்ளி கிழங்கு அரை, ஆமணக்கு எண்ணெய் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள். செய்முறை விளக்கம் : பாத்திரம் ஒன்றில் சர்க்கரை வள்ளி கிழங்கு தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.  ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆமணக்கு […]

You May Like