fbpx

கனமழை எச்சரிக்கை…! சென்னை உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை.

இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்காக இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கும்.

இன்று அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Holiday for schools in 6 districts including Chennai.. District Collector orders

Vignesh

Next Post

காபூலில் பயங்கர குண்டுவெடிப்பு!. ஆப்கன் அமைச்சர் ஹக்கானி உட்பட 6 பேர் பலி!.

Thu Dec 12 , 2024
Kabul Explosion: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் தலிபான் அகதிகளுக்கான அமைச்சர் கலீல் ரஹ்மான் ஹக்கானி உட்பட 6 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள தலிபான் அகதிகளுக்கான நலத்துறை அமைச்சரக கட்டிடத்திற்கு சென்ற பயங்கரவாதி, தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த பயங்கர குண்டுவெடிப்பில், கலீல் ஹக்கானி மற்றும் 6 பேர் பலியானார்கள் என்று தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளாார். ஆனால், ஆப்கானிய […]

You May Like