fbpx

பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த தேதியில் விடுமுறை அறிவிப்பு..!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. மேற்படி 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும். மேலும், இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜூன் 29ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : அங்கீகாரம் பெற்ற கட்சி..!! சீமான், திருமாவளவனுக்கு TVK தலைவர் விஜய் வாழ்த்து..!!

English Summary

A local holiday has been declared for Nellai district schools, colleges and all government offices on the occasion of the Nellaiappar Koil Ther festival.

Chella

Next Post

கங்கனாவின் கன்னத்தில் பளார் விட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிப்பு..!! அறிவித்தது யார் தெரியுமா..?

Fri Jun 7 , 2024
Punjab businessman Shivraj Singh has announced a reward of Rs.

You May Like