கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானதால், வயதான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் முதலான இடமாக இருக்கிறது. வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை மேற்கொள்வதன் மூலம் இந்த தோற்றத்தைத் தடுக்க முடியும்.
பச்சை உருளைக்கிழங்கு ஒன்றை அரைத்து, அதன் சாற்றை வடிகட்டி கண்களைச் சுற்றி தடவி வர இந்த பிரச்சினை குறையும். இதில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் நிறைந்தால், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை குடுக்கிறது.
அதிக அழுத்தம் கொடுக்காமல் உங்கள் மோதிர விரலை கொண்டு கற்றாழையை வைத்து கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யலாம். மேலும் எலுமிச்சை சாறு, தேன் அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து இதை செய்து வரலாம்.
2 குங்குமப்பூவை குளிர்ந்த பாலில் ஊறவைத்து கண்களைச் சுற்றி தடவி வர தோலை ஒளிரச் செய்து கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது. குங்குமப்பூவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளதால் தீங்கு விளைவிப்பதிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
டீ பேக்ஸ் எடுத்து 10-15 நிமிடங்கள் கண்களின் மீது வைக்கும் போது, கருவளையத்தை குறைக்க உதவுகிறது.