பலர் உடல் எடை அதிகரிப்பு, வயிற்றில் தொப்பை விழுதல் போன்றவற்றால், அவதியுற்று வருகிறார்கள். இதனை குறைப்பதற்கு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், அவர்களால், தொப்பையை கட்டுப்படுத்த இயலாது.
அந்த வகையில், தற்போது நாம் அடிவயிற்று தொப்பையை குறைப்பது எப்படி? என்பதை காண்போம். இரவு முழுவதும், சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, அதன் பிறகு, காலையில் எழுந்து, அதை வடிகட்டி குடித்தால், தொப்பை குறையும்..
மேலும் சோம்பை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு, காலையில், வெது,வெதுப்பாக சுட வைத்து, அதனை குடிக்கலாம். காலை வேளையில், பிளாக் டீ சாப்பிடுவதால், உடலில் இருக்கின்ற கொழுப்பு நீங்கி, தொப்பை குறைய தொடங்கும்.
கேரட், பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட காய்களை சேர்த்து காய்கறி சூப் செய்து குடித்தால், உடல் எடை வெகுவாக குறையும். மேலும், உடலில் இருக்கின்ற கொழுப்புகளை குறைப்பதற்கு கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழையை சாறு பிழிந்து, தண்ணீரில் கலந்து, குடித்து வந்தால், உடல் எடை குறைப்பில் நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.