தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலும் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என எந்த பாகுபாடும் இன்றி முடி கொத்துக் கொத்தாக பலருக்கு உதிர்கிறது. இப்படியே முடி உதிர்ந்தால் சீக்கிரத்தில் வழுக்கை விழுந்து விடுமோ என்ற பயம் பலருக்கு உள்ளது. மக்களின் இந்த பயத்தை பயன்படுத்திக்கொண்ட ஒரு சில நிறுவனங்கள் புது புது கதைகளை சொல்லி தங்களின் எண்ணெய்யை விற்பனை செய்கின்றனர்.
எவ்வளவு காசு கொடுத்துவிட்டாலும் பரவாயில்லை ஆனால் முடி உதிராமலும், வழுக்கை விழாமலும் இருந்தால் சரி என்று கூறுபவர்கள் அநேகர். நீங்களும் அந்த கூட்டத்தில் ஒருவரா? இனி கவலையே வேண்டாம். இயற்கையாகவே எப்பாடு முடி உதிர்வை தடுக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.. பொதுவாகவே, நாம் சாப்பிடும் உணவில் அதிகப்படியாக புளிப்புச் சுவை இருந்தால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும்.
அது மட்டும் இல்லாமல், தைராயிட் பிரச்சனை இருப்பவர்களுக்கும் முடி உதிர்வு அதிகமாக காணப்படும். இந்நிலையில், இது போன்று உடலில் இருக்கும் நச்சுக்களால் முடி உதிர்வு ஏற்படும் போது, நீங்கள் எத்தனை ஹேர்பேக் அல்லது எத்தனை விலை உயர்ந்த ஹேர் ஆயில்கள் பயன்படுத்தினாலும் முடி உதிர்வு நீங்காது. இதற்க்கு கட்டாயம் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். அதனடிப்படையில், எப்படி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்..
பொதுவாக, முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் இரும்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகளை தான் சாப்பிட வேண்டும். குறிப்பாக, முருங்கைக் காய், கேரட் பீட்ரூட் மற்றும் சுண்டைக்காய் ஆகியவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால், உடலில் உள்ள உஷ்ணம் குறைவது மட்டும் இல்லாமல், இரும்புச் சத்தும் அதிகம் கிடைக்கும். அதிலும் குறிப்பாக, இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளில் ஒன்று முருங்கைக் கீரை தான்.
எனவே, கட்டாயம் முருங்கைக் கீரையை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல், கறிவேப்பிலையும் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இதற்கு நீங்கள், கறிவேப்பிலையை பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம். இதனால் முடி உதிர்வு குறைவது மட்டும் இல்லாமல், முடி வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.