fbpx

“ஓரினச்சேர்க்கை உல்லாசம்..” நண்பன் கொடூர கொலை.! இளைஞர் தற்கொலை.! நடந்தது என்ன.?

ஓரினச்சேர்க்கையாளராக இருந்த நபர் தனது நண்பனை கொலை செய்து விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்(25). இவருடன் வாஞ்சிநாதன் என்ற நபர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

நண்பர்களாக தொடங்கிய இவர்களது பழக்கம் நாளடைவில் தன் பாலின காதலாக மாறியிருக்கிறது. லோகேஷும் வாஞ்சிநாதனும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களது தன்பாலின காதல் பெற்றோருக்கு தெரிந்ததால் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி வாஞ்சிநாதன் மற்றும் லோகேஷ் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் தனது நண்பன் லோகேஷை கடுமையாக கழுத்தை நெரித்து படுகொலை செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர். இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் வாஞ்சிநாதன் தனது நண்பன் லோகேஷை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது.

Next Post

கண்களில் கருவளையமா.! கவலை வேண்டாம்.. இந்த ஒரு எண்ணெய் போதும்.!?

Wed Jan 10 , 2024
கண்களில் ஏற்படும் கருவளையத்தை எப்படி நீக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முன்பாக கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து, அதை நாம் தவிர்த்தாலே நம் முகம் பொலிவுடன் கருவளையம் இல்லாமலும் இருக்கும்.  தூக்கமின்மை காரணமாக கருவளையம் வருவது தான் பலருக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்ததாக ரத்த சோகை முக்கிய பங்காற்றுகிறது. கண்களை அடிக்கடி கைகளால் தேய்ப்பது கண் வளையம் ஏற்பட காரணமாக இருக்கலாம்.  புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கத்தினால் […]

You May Like