fbpx

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து… 5 பேர் ஸ்பாட் அவுட்… 19 பேர் மருத்துவமனையில் அனுமதி…!

திருச்சி – ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடையில் அமர்ந்திருந்த பக்தர்கள் மீது மோதியதில் லாரி மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சிமெண்டை ஏற்றுக்கொண்டு சென்றுள்ளது. நமணசமுத்திரம் அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியது. இதில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடையில் அமர்ந்திருந்த பக்தர்கள் மீது மோதியதில் பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 வயது சிறுமி உட்பட 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நடந்த இந்த கோர சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vignesh

Next Post

அதிர்ச்சி...! சிக்கிய திமுக புள்ளி... உடனே கைது செய்ய வேண்டும்...! அண்ணாமலை போட்ட Tweet பதிவு...!

Sat Dec 30 , 2023
திருவண்ணாமலை கோவிலில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை, திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரன் என்ற நபர், கன்னத்தில் அறைந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக […]

You May Like