fbpx

கோர சம்பவம்!… படகு கவிழ்ந்ததில் 14 மாணவர்கள் பலி!… குஜராத்தில் சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த சோகம்!

குஜராத்தில் சுற்றுலா சென்ற போது ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 14 பேர் 2 ஆசிரியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவில் அமைந்துள்ள ஹர்னி மோத்நாத் ஏரிக்கு பள்ளி மாணவர்கள் நேற்று சுற்றுலா சென்றனர். மாலையில், ஏரியை சுற்றிப் பார்க்க 27 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் படகில் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிக பாரம் தாங்காமல் படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். இந்த விபத்தில் 14 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 10 மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஏரியில் மூழ்கிய சிலரை தேடும் பணி இரவு முழுவதும் நடந்தது.

விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்டுள்ள உயிரிழப்பு வேதனை தருகிறது. துயரமான இந்த சமயத்தில் என் எண்ணங்கள் பலியானோரின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது’ என கூறி உள்ளார். மேலும், பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதே போல, குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

Kokila

Next Post

குழந்தையின் அழுகையை நிறுத்தும் குழந்தை பொங்கல் பற்றி தெரியுமா.? 

Fri Jan 19 , 2024
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகில் அமைந்துள்ள கிராமங்கள் தலைமுறை தலைமுறையாக வினோத வழிபாடு ஒன்றை அம்மக்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் லம்பாடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அந்தப் பெண் தெய்வம் குழந்தைகளின் நோய் நொடியை போக்கி, அவர்களை அழுகாமல் பார்த்துக் கொள்வதாக நம்புகின்றனர். அந்த தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடுவதை தான் குழந்தை பொங்கல் என்று இன்றளவும் அவர்கள் கொண்டாடி […]

You May Like