மணப்பாறை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஆம்னி பேருந்து தீப்பிடித்தது. பேருந்தில் பயணம் செய்த 41 பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து, நள்ளிரவில் மணப்பாறை அருகே கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது. 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பியதால் உயிர்ச்சேதம்| தவிர்ப்பு. அக்கம் பக்கம் வீடுகளில் இருந்தோரும் ஓடி வந்து பேருந்தின் உள்ளே இருந்தவர்களை மீட்க உதவியுள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் சென்ற பயணிகள் சாதுரியமாக செயல்பட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அக்கம் பக்கம் வீடுகளில் இருந்தோரும் ஓடி வந்து பேருந்தின் உள்ளே இருந்தவர்களை மீட்க உதவியுள்ளனர்.