கிருஷ்ணகிரியில் உள்ளூர் திமுக கவுன்சிலர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை தொடர்பாக திமுக கவுன்சிலர் ஒரு போலீஸ்காரர் உட்பட ஒன்பது பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பட்டி தாலுகா அருகே உள்ள வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சார்ந்தவர் மாதையன். இவரது இரண்டு மகன்கள் ஆன பிரபாகரன் மற்றும் பிரபு ஆகியோர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் தங்கள் விடுமுறையை கழிக்க சில தினங்களுக்கு முன் சொந்த ஊர் வந்ததாக தெரிகிறது. திமுக கவுன்சிலர் சின்னசாமியும் இதே பகுதியைச் சார்ந்தவர் இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். கடந்த எட்டாம் தேதி பிரபாகரன் ஊரில் அமைந்துள்ள பொது குடிநீர் தொட்டி அருகே அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனைக் கண்ட கவுன்சிலர் சின்னசாமி குடிநீரில் துணி வைப்பது தவறு என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக பகுதிக்கு வந்த பிரபாகரனின் தாயார் ஏதோ சொல்ல அது சின்னசாமி மற்றும் பிரபாகரனுக்கு இடையே வாக்குவாதத்தை தூண்டியுள்ளது.
இதைத்தொடர்ந்து அன்று மாலை அதே பகுதிக்கு திரும்பி வந்த சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் குணாநிதி குரு சூரியமூர்த்தி ராஜபாண்டி ஆகியோர் பிரபாகரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர் . ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் பிரபாகரன் அவரது தம்பி பிரபு மற்றும் அவருடைய தந்தை மாத எண் ஆகியோரை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர் . இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . இவர்களை தாக்கி விட்டு சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபு 14 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனையடுத்து கொலை முயற்சி வழக்காக பதிவு செய்திருந்த காவல்துறையை கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான ஒன்பது பேரை தேடி வந்தது. இதில் முதலாவதாக குரு, சூரியமூர்த்தி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன், வேடியப்பன் ஆகிய ஆறு பேரை கைது செய்தது. இவர்களில் குரு சூரியமூர்த்தி சென்னை மாநகர ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வேணும் குணா நிதி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சின்னசாமி புலிப்பாண்டி மற்றும் காளியப்பன் ஆகியோரை இன்று கைது செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது காவல்துறை.