fbpx

இன்ஸ்டாகிராமில் காதல் வலை.! 17 வயது மாணவி கடத்தல்.! சிக்கிய கூலித் தொழிலாளி.!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி கடத்தப்பட்ட வழக்கில் ஹோட்டலில் கூலி வேலை செய்யும் நபர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் உனக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திருவண்ணாமலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால் காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மாணவியின் செல் போன் நம்பரை வைத்து ஆய்வு செய்தபோது திருவண்ணாமலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் மாணவியை பத்திரமாக மீட்டனர். மேலும் மாணவியகடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹோட்டலில் கூலி வேலை செய்யும் 27 வயது நபர் instagramல் காதல் செய்வதாக கூறி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலமாக காதல் வலை விரித்தது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து மைனர் சிறுமியை கடத்தியதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Post

"கழிவறைக்குள்..." நடுவானில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்.! விமான பணியாளரின் கேவலமான செயல்.!

Sun Dec 3 , 2023
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் செல்போன் வைத்து 14 வயது ஆபாசமாக வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் குறித்த ஏர்லைன்ஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவின் சார்லட் நகரில் இருந்து பாஸ்டன் நகருக்கு சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். விமானத்தில் உள்ள […]

You May Like