fbpx

இப்படியும் ஹோட்டல்களா?… எத்தனை அதிசயங்கள்! ஆச்சரியங்கள் தெரியுமா?… அறிந்துக்கொள்வோம்!

உலகில் பல விநோதமான வகையில் உருவாக்கப்பட்டுள்ள சில நவீன ஹோட்டல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம்.

உலக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழும் மாலத் தீவில் தி முராக்கா என்ற ஹோட்டல் அமைந்துள்ளது. கடலுக்கு அடியில் 16 அடி ஆழத்தில் இயங்கும் ஓட்டல்களில் பிரபலமான இந்த ஹோட்டலில், படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, உடற்பயிற்சி கூடம், மசாஜ் சென்டர் என தனிதனியாக வசதிகள் உள்ளன. இங்கு தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு சமையல் செய்துகொடுப்பதற்கென்றே தனியாக சமையல் கலைஞர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றிலும் காணப்படும் பவளப் பாறைகளின் அழகையும், மீன்களும், சுறாக்களும் துள்ளிவிளையாடும் அழகையும் ரசிப்பதற்காகவே இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்கின்றனர்.

கனடாவின் கியூபெக் நகரில் அமைந்துள்ள ஹோட்டல் டி கிளாஸ் 30 ஆயிரம் டன் உறைபனியாலும், 500 டன் பனிக் கட்டிகளாலும் உருவாக்கப்பட்ட ஐஸ் ஹோட்டலாகும். 44 அறைகள், பிரம்மாண்ட ஹால், தேவாலயம், பொழுதுபோக்கு அம்சங்களுக்கான இடம் என அனைத்தும் பனிக்கட்டியாலேயே உருவாக்கப்பட்டுள்ளது ஹோட்டல் டி கிளாஸ். அறைக்கு வெளியே மைனஸ் 30 டிகிரி அளவிற்கு குளிர் இருந்தால்கூட அறைக்குள் இருப்பவர்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படாத அளவிற்கு இந்த ஹோட்டலில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஹோட்டல் முழுவதும் ஆங்காங்கே கண்ணைக் கவரும் பனிச் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சுவிடனின் ஸ்டாக்ஹோமில் விமானத்திற்குள்ளேயே ஒரு சொகுசு ஹோட்டல் இயங்குகிறது. ஸ்டாக்ஹோம் நகரின் ஆர்லான்டா விமான நிலையம் அருகே ஜம்போ ஹோட்டல்தான் அது. தனது ஓட்டத்தை நிறுத்திக்கொண்ட போயிங் 747 ரக பிரம்மாண்ட விமானம் ஒன்றை வாங்கி அதனையே ஹோட்டலாக மாற்றி அமைத்து அதில் 25 அறைகளையும் உருவாக்கியுள்ளனர்

ஜெர்மனியில் அமைக்கப்பட்டுள்ள புரபொல்லர் ஐஸ்லேண்ட் சிட் லாட்ஜ் என அழைக்கப்படும் ஹோட்டிலில் மொத்தம் 30 அறைகள் உள்ளன.சவப்பெட்டியில் தூங்குவது போன்ற உணர்வை கொடுக்கும், இன்னொரு அறை மருத்துவமனையில் நோயாளியாக இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும். இன்னொரு அறை மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நடனம் ஆடுவது போன்ற உற்சாகத்தை கொடுக்கும். இப்படி ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் உணர்களுக்கு ஏற்ற வகையில் அறைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதில் ஒரு அறை மிகவும் வித்தியாசமான வடிவமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்றால் நீங்க தலைகீழாக தொங்குவது போன்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும்.

துருக்கியின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான கேப்படோசியா பகுதியில் 5 மற்றும் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த மலைக் குகைகளிலேயே பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த யுனாக் எவ்லரி ஹோட்டலில் பழங்கால குகைகளே அதன் பழமை மாறாமல் சொகுசு அறைகளாக மாற்றப்பட்டுள்ளன. மொத்தம் 40 டீலக்ஸ் அறைகள் இந்த ஓட்டலில் அமைக்கப்பட்டுள்ளன.

ஜப்பானின் நாகசாகி நகரில் உள்ள ஹியூஸ் டென் பாஸ்க் தீம் பார்க்கில் அமைந்திருக்கும் ஹென்னா ஹோட்டல்தான் உலகிலேயே முதல்முறையாக ரோபாட்டுக்களை பணியாளர்களாக அமர்த்தியுள்ளது. அங்கு பணியாற்றும் வரவேற்பாளர் முதல் ரூம் சர்வீஸ் ஊழியர் வரை எல்லாருமே ரோபோட்டுக்கள்தான். ஆங்கிலத்திலும், ஜப்பானிய மொழியிலும் வாடிக்கையாளர்களுடன் உரையாடுகின்றன அந்த ரோபோக்கள். தோற்றத்திலும் மனிதர்களைப் போன்றே அவை இருக்கின்றன

Kokila

Next Post

கவனம்...! நாடு முழுவதும் இன்று காலை 9 முதல் 12 மணி வரை நீட் தேர்வு...!

Sun Mar 5 , 2023
தேசிய தேர்வு வாரியம் நீட் முதுகலை 2023 தேர்வை இன்று நடத்த உள்ளது. இந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். நீட் முதுகலை 2023 தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறும்‌. தமிழகத்தில் தேர்வு மையங்கள் தொலைவில் இருப்பதால், தேர்வெழுத மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். தேர்வு வாரியம் இதற்கு முன்பு சென்னைக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்குவதாக […]
களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு

You May Like