fbpx

மண்ணில் புதையும் வீடுகள்..!! நகரை காலி செய்யும் மக்கள்..!! இந்தியாவில் இப்படி ஒரு சம்பவமா..?

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் வீடுகள் மண்ணில் புதைவதால், மக்கள் அச்சமடைந்து நகரை காலி செய்து வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நகரம் ஜோஷிமத். இந்தப் பகுதி நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியாக உள்ளது. மேலும், இங்குள்ள பத்ரிநாத் பகுதியில் இருந்து ஹெலாங் மார்வாடி பகுதிகளுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய அரசின் என்டிபிசி சார்பாக தபோவன்- விஷ்ணுகாட் நீர்மின் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கடலில் மட்டத்தில் இருந்து 6000 அடி உயரத்தில் உள்ள ஜோசிமத் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் விரிசல் ஏற்பட்டு மண்ணில் புதைந்து வருகின்றன. இங்குள்ள 561 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் பல்வேறு புகார் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.

மண்ணில் புதையும் வீடுகள்..!! நகரை காலி செய்யும் மக்கள்..!! இந்தியாவில் இப்படி ஒரு சம்பவமா..?

நீர்மின் திட்டத்தை நிறுத்தவும் மக்களை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக வேறு ஒரு மாற்று வீடு வழங்கவும் மக்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இதையடுத்து, மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி என் கே ஜோஷி வீடுகள் மண்ணில் புதையும் இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். மிகவும் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு உடனடியாக மாற்றம் நடவடிக்கை எடுத்தார். உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஸ்கர் சிங் தாமி ஜோஷிமத்தில் நிலைமை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த இடத்தை மதிப்பீடு செய்ய தான் நேரில் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

உலகில் மழையே பெய்யாத கிராமத்திற்கு ஒரு விசிட் போகலாமா?...

Fri Jan 6 , 2023
ஏமன் நாட்டில் உள்ள மலை கிராமம் ஒன்றில் இதுவரை ஒரு சொட்டு மழை கூட பெய்தது இல்லையாம். இந்த கிராமம் பற்றி முழு தகவல்களை இந்த பதிவில் காணலாம்…! உலகில் பல பகுதிகளில் மழை அதிகமாக பெய்யும் குறிப்பாக நம் நாட்டில் உள்ள மேகாலயாவின் மாசின்ராம் என்ற கிராமம் வருடம் முழுவதும மழை பெய்யும் கிராமமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் மழையே பெய்யாத பகுதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது […]

You May Like