பொதுவாக பழம் என்றாலே மனித உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் அதிலும், நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய பல்வேறு பழங்களில் பல விதமான நன்மைகள் இருக்கின்றன.
அந்த வகையில்ழ் பேரிச்சம் பழத்தில் இரும்பு சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. பேரிச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பேரிச்சம் பழத்தில், விட்டமின்கள், தாதுக்கள் இரும்பு சத்துக்கள் போன்றவை நிறைந்து இருக்கிறது. இந்த பேரிச்சம் பழத்தை ஊற வைத்த தண்ணீரை பருகுவதால், உடல் இயக்கம் சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது.. இந்த பேரிச்சம் பழத்தை ஊற வைத்த தண்ணீர், கிளைகோஜனை அதிகரித்து உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.
இந்த பேரிச்சம்பழம் ஊறவைத்த தண்ணீரில் இருக்கின்ற கால்சியம் மற்றும் இரும்பு சத்து போன்றவை, எலும்பு பகுதியை வலுப்படுத்த உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.. காலை வேளையில் பேரிச்சம் பழத்தை ஊற வைத்த தண்ணீரை பருகுவது, உடலில் ஆன்டி ஆக்ஸிடென்ட்களை அதிகப்படுத்த உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பேரிச்சம் பழத்தை ஊற வைத்த தண்ணீர், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆற்றலையும் கொடுக்கின்றது.