பல பெண்கள் சமையலறையில் ஏற்படும் கறை மற்றும் துர்நாற்றத்தை நீக்க முடியாமல் பெரும் அவஸ்தைக்கு ஆளாவார்கள். அவர்களுக்கான செய்தி தான் இந்த பதிவு. இதனைப் படித்து தெரிந்து கொண்டு உங்களுடைய சமையலறையை எப்போதும் நறுமணமாக வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் உங்கள் சமையலறையில் இருக்கும் சிங்க் தொட்டியில் பேக்கிங் சோடாவை தெளிக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அந்த தொட்டியை பிரஷ் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும் பிறகு குச்சியை வைத்து நன்றாக கிளறி விட வேண்டும். கடைசியாக தண்ணீரை திறந்து விட்டால் போதும், ஒட்டுமொத்த அழுக்கும், துர்நாற்றமும் வெளியேறி அந்த தொட்டி நறுமணமாக மாறிவிடும் துர்நாற்றம் வீசாது.
அந்த சிங்க் தொட்டியில் வீசும் துர்நாற்றத்தை போக்கும் மற்றொரு எளிதான வழிமுறை நாப்தலீன் உருண்டைகள். இதை சிங்கில் போட்டு வைத்தால் அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தை தடுக்க முடியும். உங்களுடைய சமையலறை சிங் தொட்டியில் துர்நாற்றம் வீசத் தொடங்கினால் அதனை சரி செய்வதற்காக உடனடியாக வெள்ளை வினிகரை வைத்து அந்த தொட்டியை சுத்தம் செய்யுங்கள் உடனடியாக துர்நாற்றம் நீங்கி நறுமணம் வர தொடங்கிவிடும்.
எலுமிச்சை தோல்களை தூக்கி எறிவதற்கு பதிலாக உங்களுடைய சிங்க் போட்டியில் வீசும் துர்நாற்றத்தை போக்க அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தப்பட்ட எலுமிச்சை பழத்தின் தோலில் உப்பு தடவி சிங்க் தொட்டி முழுவதும் தேய்த்து விட்டால் துர்நாற்றம் குறைந்து நல்ல நறுமணம் வீசும்.
பல வீடுகளில் சாக்கடையை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் சிங்க் தொட்டியில் துர்நாற்றம் வீசும் அபாயம் இருக்கிறது. இது போன்ற நேரங்களில் முதலில் முறையாக சாக்கடையை சுத்தம் செய்துவிட்டு நம்முடைய வேலைகளை கவனித்தால் தானாகவே துர்நாற்றம் குறைந்துவிடும்.