மத்திய அரசு வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக வெளிநாடுகளில் இந்திய மக்கள் தங்களது கிரெடிட் கார்டு-களை பயன்படுத்தி செலவு செய்யும் தொகைக்கு 20 சதவீத ஆதாரத்தில் இருந்து வரி வசூலிக்கும் (TCS) நடைமுறையில் உள்ளது. முதலில் TDS, TCS என்ற இரு வரி வசூல் முறை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இதில் TDS என்பது தனிநபரின் வருமானத்தில் இருந்து நேரடியாக வசூலிப்பது. TCS என்பது ஒரு பொருளை வாங்கும் போது விற்பனையாளர் வசூலிப்பது, விற்பனையாளர் வசூலித்த தொகையை அரசிடம் செலுத்த வேண்டும்.
ஒருவர் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிரெடிட் லிமிட் கொண்ட கிரெடிட் கார்டு வைத்துள்ளார். இந்த கிரெடிட் கார்டை வைத்துக்கொண்டு துபாய்-க்கு சுற்றுலா செல்கிறார் என வைத்துக்கொள்வோம். அங்கு ஹோட்டல் பில், ஷாப்பிங், உட்பட அனைத்திற்கும் கிரெடிட் கார்ட்-ஐ பயன்படுத்துகிறார். மொத்த செலவு 2.5 லட்சம் எனில் 20 சதவீதம் TCS வரியான 50000 ரூபாயை சேர்ந்து 3 லட்சம் அவருடைய கிரெடிட் தொகையில் இருந்து கழிக்கப்படும். இந்த 50000 ரூபாய் கிரெடிட் கார்டு கொடுத்த வங்கி அரசிடம் இவர் உடைய பான் எண் இணைக்கப்பட்ட வருமான வரி கணக்கில் செலுத்தும். இந்த வரியை வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது கிளைம் அல்லது அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ளலாம்.
இந்த மத்திய அரசின் இந்த 20 சதவீதம் டிசிஎஸ் வரி விதிப்புக்கு முக்கிய காரணமாக சிலவற்றை கூறப்படுகிறது. மத்திய அரசின் TCS பணபுக்கத்தை அதிகரிக்க வேண்டும். வரி அமைப்பிற்குள் அதிகமானோர் இணைக்கப்படுவார்கள். வரி ஏய்ப்பு குறையும். உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியாகவும் இதை பார்க்கப்படுகிறது வெளிநாட்டில் மருத்து சிகிச்சைக்காக கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் போது தற்போது இருக்கும் 5 சதவீத TCS தொடரும். இதற்கும் 7 லட்சம் வரையில் மட்டுமே அளவீடு. வெளிநாட்டு சுற்றுலா பேகேஜ் மற்றும் வெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செய்யும் பேமெண்ட்-க்கு 5 சதவீதம் வரையிலான TCS வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டு உள்ளது, இதேபோல் இவ்விரு பிரிவுக்கும் எவ்விதமான நிதி கட்டுப்பாடும் இல்லை எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.