fbpx

மெத்தனால் உயிரைப் பறிப்பது எப்படி..? குடித்தவுடன் மனித உடலில் என்ன நடக்கும்..? மருத்துவர் சொல்லும் விளக்கம்..!!

கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதே கள்ளக்குறிச்சி மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மெத்தனால் எந்த வகையில் உயிரைப் பறிக்கிறது? அது நுழைந்ததும் மனித உடலுக்குள் என்ன நடக்கும்? என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”கள்ளச்சாராயத்திற்கும், விஷ சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம். போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. இது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும். அது தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100% ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும்” என்று அவர் கூறினார்.

மேலும், மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷச்சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால், அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும்.

அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனடியாக அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைவார்கள். அதிக போதை வேண்டும் என்ற எண்ணத்தில் அறியாமையால்தான் இதனை சிலர் சாப்பிடுகின்றனர். அதிக நேரம் போதையில் மிதக்கச் செய்வதன் மூலம் இது தங்களை நேராக சொர்க்கத்திற்கே கூட்டிச் செல்லும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், நடப்பதோ வேறு” என்று தெரிவித்தார்.

Read More : ‘மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது’..!! மருத்துவத்துறை கடும் எச்சரிக்கை..!!

English Summary

How does methanol kill? What happens inside the human body when it enters? Let’s see in this post.

Chella

Next Post

'ICU-வில் திருமணம்.. மருத்துவ கவச உடையில் மணமக்கள்!!' அனைவரையும் நெகிழ வைத்த அந்த நொடி!! முழு விவரம் இதோ!!

Thu Jun 20 , 2024
A weird wedding ceremony took place in the intensive care unit (ICU) of a hospital in Lucknow, a video of which is now going viral on social media.

You May Like