இந்தியாவில் கடந்த சில நாட்களாக H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நகரங்களில் H3N2 வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் காரணமாக, இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.. கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய 3 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.. இந்த வைரஸ் எப்படி பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன..? அதை எப்படி தடுப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..
H3N2 அறிகுறிகள்
- சளி
- இருமல்
- காய்ச்சல்
- குமட்டல்
- வாந்தி
- தொண்டை வலி
- உடல் ஒரு வலி
- வயிற்றுப்போக்கு
- தும்மல்
H3N2 எவ்வாறு பரவுகிறது.. ? H3N2 மிகவும் வேகமாக பரவும் தொற்று நோயாகும். இந்த வைரஸால் பாதிக்கப்படும் நபர்களுக்கு 4-5 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் நீடிக்கிறது.. மேலும் இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை புண் மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகுளும் ஏற்படுகிறது.. இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடைய 3 வாரங்கள் வரை ஆகிறது…
எப்படி தடுப்பது? H3N2 இன்புளூயன்ஸாவைத் தடுக்க, ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி போடுவது அவசியம்.. மேலும், அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைக் கழுவ வேண்டும். நெரிசலான இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.. குறிப்பாக பொது இடங்கள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள், ரயில்கள் மற்றும் பிற இடங்களில், மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், குறைந்தபட்சம், முகக்கவசம் அணியவேண்டும்.. முகக்கவசம் அணியாமல் நெரிசலான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும்..
சாப்பிடுவதற்கு முன் சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கைகளைக் கழுவவும்.. மேலும் பலர் காய்ச்சலுக்கு ஆண்டி பயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர்.. ஆனால் அவை பாக்டீரியாவை மட்டுமே எதிர்த்துப் போராடுகின்றன என்றும், வைரஸ்களை எதிர்த்து போராடு என்றும், அவை காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படக்கூடாது.. நோய்வாய்ப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.. தும்மும்போது அல்லது இருமும்போது வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும்.. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது பள்ளி அல்லது அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.. மருத்துவர்களுடன் முறையான ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.