ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னை அடுத்த போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இதய ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், தற்போது மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்து வருவதாகவும், தொடர்ந்து அவருக்கு ஐ.சி.யு.வில் சிகிச்சை தொடர்வதாக தெரிவித்துள்ளது.