ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் அஜித்தின் படங்களில் இந்தப் படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் போஸ்டர், டீசரை பார்க்கும்போது, சற்று வித்தியாசமான ஒரு படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டீசர் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் படு வைரலானது. இதை ரசிகர்கள் கொண்டாடினர்.
அந்த வகையில், இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் திரையரங்க உரிமையாளர் திருச்சி ஸ்ரீதர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில், ‘குட் பேட் அக்லி’ படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து பேசியுள்ளார். அதாவது, “மலேசியாவில் இருக்கும் என் நண்பர் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சென்சார் காட்சியை பார்த்துள்ளார். இப்படம் சிட்டிசன், தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்களின் கலவையில் உருவாகியுள்ளது. இதனால், இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையை கிளப்பும்” என தெரிவித்துள்ளார்.
Read More : மும்பை அணி வீரரை திடீரென பேட்டால் அடித்து விரட்டிய எம்.எஸ்.தோனி..!! இணையத்தில் படுவைரலாகும் வீடியோ..!!