பணியாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு நிறுவனத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அல்லது பணியை முடித்தவுடன் அவர்களுக்கு நிதி ஆதாரத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், பணியாளர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து வருங்கால வைப்பு நிதியை ஓய்வூதியத்தின் போது அல்லது ஓய்வுக்கு முன் எடுக்கலாம். இருப்பினும், திரும்பப் பெறுதல் செயல்முறை நீண்ட மற்றும் சிக்கலானதாக இருக்கலாம்.. எனவே பிஎஃப்-ன் திரும்பப் பெறும் செயல்முறை தொடர்பான சில விவரங்கள் இங்கே உள்ளன.
EPF தொகை எடுக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? பிஎஃப் கணக்கைத் திறந்த பிறகு, பிஎஃப் தொகையை திரும்பப் பெறுவது ஒரு நீண்ட செயல்முறையாகும். அந்த தொகை கிரெடிட் செய்யப்படுவதற்கு குறிப்பிட்ட தேதிகள் எதுவும் இல்லை, ஆனால் உங்கள் கணக்கில் EPF வரவு வைக்க பொதுவாக 5-30 நாட்கள் ஆகும்.
EPF தொகையை எப்போது, எப்படி திரும்பப் பெறுவது? ஒருவர் தனது ஓய்வு காலத்தில் அல்லது சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே EPF திரும்பப் பெற முடியும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலமாகவோ அல்லது நேரடியாக் பிஎஃப் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிப்பதன் மூலமாகவோ உங்கள் இபிஎஃப் திரும்பப் பெறலாம்… எனினும் UAN இல் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண் வேலை செய்ய வேண்டும், மேலும் UAN உங்கள் KYC உடன் இணைக்கப்பட வேண்டும். ஆன்லைனில் பணம் எடுப்பது EPF திரும்பப் பெறுவதை மிகவும் வசதியாக மாற்றியுள்ளது.
EPF விதிகள்
- ரூ.15,000/- வரை அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்கள் இந்த EPF திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.
- EPF-ஐ எளிதாக மாற்ற முடியும் என்பதால், ஒரு ஊழியர் வேலை அல்லது நிறுவனத்தை மாற்றும்போது வருங்கால வைப்பு நிதிக் கணக்கைத் திரும்பப் பெறத் தேவையில்லை.
- அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் வயது 54 அல்லது அதற்கு மேல் இருக்கும் போது EPF இன் 90% திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
- PF கணக்கில் 3 ஆண்டுகளுக்கு மேல் எந்தப் பங்களிப்பையும் பெறவில்லை என்றால் வட்டி வரவு வைக்கப்படாது.
- 20 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட முதலாளி அல்லது நிறுவனங்கள் சட்டத்தின்படி EPFO க்கு பதிவு செய்ய வேண்டும். உங்களிடம் 20க்கும் குறைவான பணியாளர்கள் இருந்தால், முதலாளிகள் தானாக முன்வந்து பதிவு செய்யலாம்.