UAN: சில நேரங்களில் ஒரு புதிய நிறுவனத்தில் சேரும்போது ஊழியர் தனது UAN நம்பர் மற்றும் EPF கணக்கை ஒழுங்காக வழங்குவதில்லை. எனவே புதிய நிறுவனங்கள் புதிதாக ஒரு அக்கவுண்ட்டை பதிவு செய்துவிடும். மற்றொன்று சில நேரங்களில் ஒரு ஊழியர் வெளியேறும் போது EPFO அமைப்பில், ஊழியர் நிறுவனத்திலிருந்து ரிசைன் செய்யும் தேதியை நிறுவனங்கள் சரியாக பதிவிடுவதில்லை. இந்தத் தகவல் சரியான நேரத்தில் அப்டேட் செய்யப்படவில்லை என்றாலும் இபிஎப்ஓ உங்களுக்கு ஒரு புதிய UAN நம்பரை உருவாக்கிவிடும்.
உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட யூஏஎன் நம்பர் இருந்தால் உங்கள் அனைத்து கணக்குகளையும் ஒரே ஒரு யூஏஎன் நம்பரின் கீழ் இணைக்க முடியும். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு புதிய நிறுவனத்தில் சேரும்போது ஏற்கனவே உள்ள யூஏஎன் என்னை மறக்காமல் வழங்குங்கள். இது போன்ற செயல்களால் கூடுதல் யூஏஎன் நம்பர் உருவாகாமல் இருக்கும்.
UAN எண்களை ஒருங்கிணைப்பது எப்படி?: EPFO இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் உங்கள் UAN நம்பரை ஒன்றிணைக்கலாம். இதற்கு, உங்கள் பழைய மற்றும் புதிய UAN நம்பர், உங்கள் ஆதார் நம்பர், உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற தகவல்கள் தேவைப்படும்.
முதலில் EPFO இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். அதன் பிறகு “ஆன்லைன் சர்வீசஸ்” என்ற மெனுவின் கீழ் இருக்கும் “ஒன் மெம்பர் ஒன் EPF (டிரான்ஸ்பர் ரெக்வஸ்ட்)” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தற்போதைய EPF கணக்கு காண்பிக்கப்படும். PF டிரான்ஸ்பர் செய்ய, பழைய UAN அல்லது PF கணக்கு எண்ணை வழங்கி “கெட் டீடைல்ஸ்” என்பதைக் கிளிக் செய்யவும். பழைய கணக்கின் விவரங்கள் திரையில் காண்பிக்கப்படும். விவரங்களை கவனமாக சரிபார்த்துவிட்டு “ஜெனரேட் ஓடிபி” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும்.
பெறப்பட்ட ஓடிபி-ஐ வழங்கி “சப்மிட்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு உங்களுடைய தற்போதைய நிறுவனத்திடம் கோரிக்கையை அங்கீகரிக்க கூறுங்கள். உங்கள் முதலாளி அங்கீகரித்த பிறகு EPFO முந்தைய கணக்குகளை தற்போதைய கணக்குடன் இணைக்கும். இந்த செயல்முறை முடிவதற்கு சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை ஆகலாம். இதில் மிகவும் முக்கியமானது உங்கள் பழைய EPF கணக்குகளில் கேஒய்சி செயல்முறையை முடித்திருக்க வேண்டும். உங்களிடம் பல EPF கணக்குகள் இருந்தாலும், அவை அனைத்திற்கும் கேஒய்சி செயல்முறை கட்டாயம்.
Readmore: அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய முஸ்லிம் நாடாக மாறும்!. வெளியான தகவல்!.