சர்வதேச போர் பதற்றம், பொருளாதார நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் வரி குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவை விட மற்ற நாடுகளில் தங்கம் விலை குறைவாக உள்ளது. அந்த வகையில் தங்கம் விலை மலிவாக கிடைக்கும் நாடு என்றால் அது துபாய்.
துபாயில் தங்கம் விலை குறைவாக இருப்பதால் பலரும் அங்கிருந்து தங்கம் வாங்கி வருகின்றனர். தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக இருப்பது மட்டுமல்லாமல், திருமணம் போன்ற கலாச்சார காரணங்களுக்காகவும் தங்கம் அதிகமாக வாங்கப்படுவதால், மலிவு விலையில் தங்கம் வேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பமாக உள்ளது.
சமீபத்தில் கன்னட நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், சுங்க வரி செலுத்தாமல் துபாயிலிருந்து இந்தியாவிற்கு சட்டப்பூர்வமாக எவ்வளவு தங்கத்தை கொண்டு வர முடியும் என்று தெரிந்து கொள்வோம்.
துபாயிலிருந்து இந்தியர்கள் எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்?
மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை மத்திய வாரியத்தின்படி, வரி செலுத்திய பிறகு 6 மாதங்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருக்கும் இந்திய பயணிகள் துபாயிலிருந்து 1 கிலோ தங்கத்தை சாமான்களில் கொண்டு வரலாம். தங்கத்தை எந்த வடிவத்தில் கொண்டு வரலாம் என்பதைப் பொறுத்தவரை, இந்தியர்கள் துபாயிலிருந்து தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளை மீண்டும் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
வரி இல்லாத தங்க வரம்பு என்ன?
ஆண்கள் ரூ.50,000க்கு மிகாமல் மதிப்புள்ள 20 கிராம் தங்கத்தை, தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களாக, எந்த சுங்க வரியும் செலுத்தாமல் துபாயிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரலாம்.
பெண்கள் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் மதிப்புள்ள 40 கிராம் தங்கத்தை, நகைகள், தங்கக் கட்டிகள் அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்கான தங்க நாணயங்களாக, எந்த சுங்க வரியும் செலுத்தாமல் துபாயிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரலாம்.
தங்கத்தை எடுத்துச் செல்லும் அனைத்து பயணிகளும் தங்கத்திற்கான முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். சுங்க அதிகாரிகள் அவற்றை சரிபார்ப்பார்கள்.
Read More : வெறும் ரூ. 55 சேமித்தால் போதும்.. மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம்.. அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?