வேலைக்கு செல்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் காலையில் ஒரு முறை, 11 மணி அளவில் ஒரு முறை, மாலை வேளையில் ஒரு முறை என குறைந்தது 3 வேலையாவது டீ குடித்தால் தான் பொழுதே ஓடும். இதுபோன்ற நபர்கள் இருக்கும் வரை டீக்கடை வைத்திருப்பவர்களுக்கு லாபம் ஒருபோதும் குறையாது. பலருக்கும் தாமாக ஒரு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் பட்ஜெட் காரணமாக அவற்றை தள்ளி வைத்துக் கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற சிறு தொழிலை ஆரம்பிப்பதன், மூலம் பெரிய முதலீடின்றி அதிக லாபம் பெற முடியும். ஒரு டீக்கடை வைக்க எவ்வளவு முதலீடு தேவை? உள்ளிட்ட பிற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேநீர் கடையை ஆரம்பிப்பது எப்படி?
குறைந்தது ரூ. 20,000 இருந்தால் தள்ளு வண்டியை வாங்கிவிடலாம். தேவையான அடுப்பு, டீ கேன், போன்றவற்றை வாங்குவதற்கு ரூ. 5000 முதல் ரூ. 6000 வரை செலவாகலாம். கடையை நிறுவ இடத்தை பிடிக்கும் போது ஒரு முக்கியமான விஷயத்தை கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்றால் மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே கடையை திறக்க வேண்டும். அப்பொழுது தான் வாடிக்கையாளர்களின் கண்ணில் உங்களுடைய கடை படும்.
டீக்கடையில் வரக்கூடிய லாபம் விற்பனையின் அளவை பொறுத்து மாறுபடலாம். உதாரணமாக ஒரு கப் டீ-யின் விற்பனை விலை ரூ.10 என்று வைத்துக் கொள்வோம். அதில் லாபமாக 50 சதவீதம் கிடைக்கிறது. அதாவது 10 ரூபாயில் 5 ரூபாய் லாபமாக கிடைக்கிறது. இந்த கணக்குப்படி ஒரு நாளைக்கு 300 டீ விற்பனை செய்யப்பட்டால், ரூ. 3000 கிடைக்கும். அதில் லாபம் ரூ. 1500 ஆக இருக்கும். ஒரு நாளைக்கு லாபம் ரூ. 1500 எனில், ஒரு மாதத்திற்கு ரூ. 45,000 வரை உங்களால் சம்பாதிக்க முடியும். இது டீ விற்பனைக்கான லாபம் மட்டுமே.
நீங்கள் மற்ற பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்வதை யோசித்துப் பாருங்கள். உதாரணமாக பஜ்ஜி, பக்கோடா, சமோசா, சாண்ட்விச் போன்ற பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்தால் லாபம் இன்னும் அதிகமாக இருக்கும். ஒரு நிறுவனத்தில் பணி புரியும் ஊழியருக்கு கூட அவ்வளவு சம்பளம் கிடைக்காது. சர்வ சாதாரணமாக ஒரு மாதத்திற்கு தோராயமாக ரூ. 1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.
Read more ; பெற்றோர் இறந்ததாக போலி ஆவணம்.. சொத்தை அபகரிக்க இப்படி கூடவா செய்வாங்க? பாசக்கார மகள் கைது..!!