fbpx

ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்..? வருமான வரித்துறையின் விதிகள் இதோ..

இந்தியாவில், டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அதிகரித்து வருகிறது.. சாதாரண பெட்டிக் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை அனைத்து இடங்களிலும் தற்போது யுபிஐ பேமெண்ட் முறை அதிகரித்துள்ளது.. GPay, Phone Pe, Paytm போன்ற செயலிகள் மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தி வருகின்றனர்.. ஆனால் மறுபுறம், வீட்டில் பணத்தை வைத்திருக்கும் பாரம்பரிய முறையை நம்பும் பெரும்பான்மையான இந்தியர்கள் இன்னும் உள்ளனர்.

அதில் நீங்களும் ஒருவராக இருந்தால், கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்.. ஆம்.. ஒரு வீட்டில் சேமித்து வைக்கக்கூடிய தொகையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.. நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், வீட்டில் பணத்தை வைத்திருப்பது மிகவும் பொதுவான விஷயம்.. மேலும் வருமான வரிச் சட்டத்தின்படி, வீட்டில் பணம் வைத்திருக்க எந்தத் தடையும் இல்லை. ஆனால், வருமான வரித்துறை ரெய்டு நடந்தால், பணம் வந்ததற்கான ஆதாரத்தை சம்மந்தப்பட்ட நபர் தெரிவிக்க வேண்டும். உங்கள் ஆவணங்கள் வீட்டில் வைத்திருக்கும் பணத்துடன் பொருந்தவில்லை என்றால் வருமான வரித்துறை அதிகாரிகள் உங்களுக்கு அபராதம் விதிக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், வருமான வரித்துறையினர் கணக்கில் காட்டப்படாத பணத்தை பறிமுதல் செய்வார்கள்.. மொத்த பணத்தில் 137% வரை அபராதம் விதிக்கலாம்…

வருமான வரித் துறையால் உருவாக்கப்பட்ட பணம் தொடர்பான விதிகள் இதோ :

  • எந்தவொரு நிதியாண்டிலும் ரூ. 20 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகள் கணக்கில் காட்டப்படாமல் மற்றும் ஆதாரம் இல்லாமல் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.
  • மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின்படி, ஒரே நேரத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய அல்லது திரும்பப் பெறுவதற்கு பான் எண்கள் மற்றும் விவரங்களைக் காட்டுவது அவசியம்.
  • ஒரு கணக்கு வைத்திருப்பவர் ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்தை ரொக்கமாக டெபாசிட் செய்தால், அவர் பான் மற்றும் ஆதார் தகவல்களைக் காட்ட வேண்டும்.
  • 30 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக சொத்துக்களை வாங்குவது அல்லது விற்றால், எந்த ஒரு இந்திய குடிமகனும் விசாரணை அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வரலாம்.
  • கிரெடிட்-டெபிட் கார்டு செலுத்தும் போது, ஒரு கார்டுதாரர் ஒரே நேரத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலுத்தினால், அந்த நபருக்கு எதிராக விசாரணை நடத்த முடியும்.
  • ஒரு நாளில் உறவினர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுக்க முடியாது. இந்த செயல்முறையை வங்கி மூலம் செயல்படுத்த வேண்டும்.

Maha

Next Post

பேரழிவை ஏற்படுத்த வடகொரியா திட்டம்?... கடலுக்கு அடியில் செயற்கை சுனாமியை உருவாக்க சோதனை!... உலகநாடுகள் அச்சம்!

Sun Mar 26 , 2023
செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் முயற்சியாக புதிய அதிநவீன அணு ஆயுத டிரோனை கடலுக்கு அடியில் பரிசோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் நீண்ட நாட்களாக பகை நிலவி வருகிறது. இதனிடையே தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இந்த இரு நாடுகளும் சேர்ந்து கடந்த வாரம் கூட்டுப்போர் படை பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்துவரும் நிலையில், இந்த கூட்டுப்போர் படை பயிற்சிக்கு பதலடி தரும் […]

You May Like