fbpx

பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு..? அடடே இனி ரொம்ப ஈசியா தெரிஞ்சிக்கலாம்..!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது வழக்கம். இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை ஊழியரும், அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் PF கணக்கில் செலுத்துவது கட்டாயம். அதன்படி, உங்களுடைய பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பணம் சேர்ந்து கொண்டே வருகிறது. அப்படி உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் தவறி உள்ளது என்பதை எளிதாக நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.

பிஎஃப் பேலன்ஸ் தொகையை பார்க்க வேண்டுமென்றால் எஸ்எம்எஸ் மூலமாக, ‘EPFOHO UAN ENG’ என்ற முறையில் உங்களது UAN நம்பரை சேர்த்து 7738299899 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். பின்னர், உங்களது பிஎஃப் பேலன்ஸ் தொகை எவ்வளவு என்பது உங்களது போனுக்கு எஸ்எம்எஸ் மூலமாக வந்து சேரும். இதனைத் தவிர பிஎஃப் இணையதளம் மூலமாகவும் பேலன்ஸ் தொகையை பார்க்க முடியும்.

* முதலில் https://epfindia.gov.in/என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

* அதில் ’Member passbook’ என்பதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

* அதில் UAN மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட வேண்டும்.

* அதன்பிறகு தோன்றும் பக்கத்தில் உங்களது பிஎஃப் கணக்கில் உள்ள மொத்த பணம் மற்றும் வட்டி மூலம் கிடைத்த பணம் எவ்வளவு என்பதை நீங்கள் எளிதாக பார்க்கலாம்.

* மேலும், உங்களது மொபைலில் இருந்து 011-22901406 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவும் பிஎஃப் பேலன்ஸ் தொகையை தெரிந்து கொள்ள முடியும்.

* இதனைத் தவிர மொபைலில் உமாங் ஆப் டவுன்லோட் செய்து அதில் எளிதாக உங்களது பிஎஃப் பேலன்ஸ் தொகையை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.

Chella

Next Post

தமிழகத்தில் இந்த 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

Sat May 6 , 2023
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் வளிமண்டலுக்கு சுழற்சியின் நிலவுகிறது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி ஏற்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வரும் 8ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் இது 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய […]

You May Like