ஒருவர் அரசுத் துறையிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேலை பார்த்து வந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதி என்று ஒரு தொகை பிடித்தம் செய்யப்படும். அந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகை நேரடியாக அவர்களுடைய வருங்கால வைப்பு நிதி தொகைக்கு சென்று விடும்.
பின்பு அந்த வருங்கால வைப்பு நிதி அவர்கள் வேலையில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும்போது அவர்களுக்கு உதவியாக இருக்கும். இதுதான் வருங்கால பைப்பு நிதியின் சூட்சமம்.
ஆனால் இந்த வருங்கால வைப்பு நிதி நம்மிடம் எவ்வளவு இருக்கிறது. என்பதை அறிந்து கொள்வதற்கு பலரும் முயற்சி செய்வார்கள். உடனடியாக நாம் நினைத்த போது நம்முடைய வருங்கால வைப்பு நிதியின் நிலை என்ன என்பது பற்றி அறிந்து கொள்வதற்கான வழிமுறைகளை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வருங்கால வைப்புநிதியை நான்கு முறைகளில் மிகவும் எளிதாக அறிந்து கொள்ளலாம். அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
EPF அமைப்பின் கீழ் இணைந்துள்ள பணியாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலை படியில் 12 சதவீதம் ஒரு நிலையான வாய்ப்புத் தொகை என்று டெபாசிட் செய்யப்படுகிறது. தற்சமயம் இப்படி டெபாசிட் செய்யப்படும் இந்த வருங்கால வைப்பு நிதி தொகையை நாம் பெறுவது எப்படி என்பதை நாம் பார்ப்போம். முதலில் UAN போர்ட்டலில் மொபைல் எண்ணை முதலில் பதிவு செய்து KYC செயல்முறையை முடித்தவுடன் 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
இதற்குப் பிறகு உங்களுடைய கைபேசி எண்ணிற்கு வருங்கால வைப்பு நிதி தொடர்பான இருப்பு விவரங்கள் எஸ் எம் எஸ் மூலமாக அனுப்பப்படும் அதோடு, 7738299899 என்ற எண்ணிற்கு நேரடியாகவும் செய்தி அனுப்பலாம். அப்படி அனுப்பினால், உங்களுடைய வருங்கால வாய்ப்பு நிதி இருப்புத் தொகையை உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும். இதோடு, மட்டுமல்லாமல் இன்னொரு வழியிலும் வருங்கால வகுப்பு நிதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அதாவது,EPFOன் இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பணியாளர்களுக்கான விருப்பத்தினை தேர்வு செய்து அடுத்ததாக சேவை பக்கத்தில் இருக்கின்ற பாஸ்புக் என்ற விருப்பத்தை தேர்வு செய்தும் வருங்கால வைப்பு நிதி தொடர்பான இருப்பை நாம் அறிந்து கொள்ளலாம். அதோடு, அரசாங்கம் அறிமுகம் செய்து இருக்கும் UMANG என்ற தனிப்பட்ட செயலியின் மூலமாகவும் வருங்கால வைப்பு நிதி தொடர்பான இருப்பை அறிந்து கொள்ளலாம்.