fbpx

மாதவிடாய் காலங்களில் வரும் வலியை சுலபமாக குறைப்பது எப்படி….?

பெரும்பாலும் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு சில உடல் உபாதைகள் வெளியே சொல்ல முடியாத பல்வேறு துன்பங்களை தருகின்றன. இன்னும் சொல்லப்போனால் ஆண்களால் கூட தாங்க முடியாத ஒரு சில உடல் உபாதைகளையும் பெண்கள் தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் மாதவிடாய் காலங்களின்போது அனைத்து பெண்களும் வயிற்று வலி, கால்வலி, என்று பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருகிறார்கள். மாதவிடாய் காலங்களில் உண்டாகும் பிடிப்புகள் மற்றும் வயிற்று வலி என்பது அனைவருக்கும் பொதுவானது தான். ஆனாலும், இது போன்ற உபாதைகளால் ஒரு சிலர் கடுமையான பாதிப்பு ஆளாகிறார்கள்.

இந்து சமயத்தில் பெண்களின் கருப்பையில் புரோஸ்டாக்லாண்டின் என்ற ஹார்மோன் வெளியிடப்படுகின்றதாம். இந்த சூழ்நிலையில்தான் கருப்பையில் போதிய ரத்தம் இல்லாததால் தசைகள் அனைத்தும் சுருங்கி அடிவயிற்றில் வலி உண்டாகிறது. சில இயற்கையான முறைகளால் எந்த விதமான பக்க விளைவும் இன்றி இந்த வலிகளை சரி செய்யலாம் என்று கூறப்படுகிறது, அது பற்றி தற்போது நாம் பார்க்கலாம்.

வயிற்று வலியை குறைப்பதற்கு சூடான பொருட்கள் இல்லை என்றால் சூடான பேட்களை பயன்படுத்தலாம். இப்படி வலி இருக்கும் சமயத்தில் இந்த வலியின் நிவாரணியாக வெப்பமூட்டும் சில பொருட்களை பயன்படுத்தினால் வயிற்றுப் பிடி குறைக்கப்படும் என கூறப்படுகிறது. அதோடு சுடு தண்ணீரில் நீராடும்போது உடலில் சற்றே வெப்பமயம் அதிகரிக்கலாம் ஆகவே நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.

மாதவிடாய் காலங்களில் அடிவயிறு மற்றும் இடுப்பு போன்ற பகுதிகளில் வலி ஏற்படுவதற்கு இடுப்பு பகுதிகளில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதே முதல் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த வலியை குறைப்பதற்காக உடலுக்கு மென்மையான உணர்வை வழங்கக்கூடிய விதத்தில், மசாஜ் செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில், வயிற்றுப் பகுதியில் இருந்து மெல்ல மேல்நோக்கி மசாஜ் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த மசாஜின் மூலமாக ரத்த ஓட்டத்தை சீராக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மாதவிடாய் காலங்களில் உண்டாகக்கூடிய கடுமையான வயிற்று வலியில் இருந்து விடுபடுவதற்காக, அன்றாட உணவில் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் அதன் அடிப்படையில், பாதாம், கீரை, தயிர், வேர்க்கடலை போன்றவற்றை சேர்த்து கொள்வதன் மூலமாக வயிற்று வலியை நம்மால் குறைக்க முடியும்.

அதோடு, இந்த மாதவிடாய் காலங்களில் உடற்பயிற்சியை செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அதோடு, உடல் சுறுசுறுப்பாக இருக்கும்போது குறைந்த அளவிலான வலியை உணர முடியும். ஆகவே இந்த சமயத்தில் தான் மிதமான உடற்பயிற்சியை செய்வதன் மூலமாக வலியை நம்மால் குறைக்க இயலும். இதன் காரணமாக, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரித்து அதன் மூலம் வலி குறைகிறது.

இந்த மாதவிடாய் காலங்களில் போது உண்டாகும் ரத்தப்போக்கு காரணமாக, உடலில் உள்ள பலம் வெகுவாக குறைந்து போகிறது. இந்த சமயத்தில் தான் இனிப்பான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதன் மூலமாக கருப்பை பிடிப்பை நம்மால் குறைக்க இயலும். இதற்கு எடுத்துக்காட்டாக வெல்லத்தில் இருக்கின்ற சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களை சொல்லலாம். அதோடு, வெள்ளம் சுழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது

Next Post

குளிர்ச்சியான நீரில் குளிப்பது உடலுக்கு நன்மை பயக்குமா…..?

Mon Jul 31 , 2023
கோடை காலங்களில் மக்கள் அதிகமாக விரும்புவது குளிர்ந்த நீரை தான். அது பருகுவதற்காக இருந்தாலும் சரி, நீராடுவதற்காக இருந்தாலும் சரி கோடை காலங்களில் குளிர்ந்த நீரை தான் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த குளிர்ந்த நீரில் இருக்கும் நன்மை தீமை பற்றி பெரிதாக யாரும் ஆராய்வதில்லை அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். ஒருவர் குளிர்ந்த நீரில் நீராடும்போது அவருக்கு தாழ்ந்த வெப்பநிலை உண்டாவது தடுக்கப்படுகிறது. இந்த […]

You May Like