fbpx

‘PAN CARD’ தொலைந்து விட்டது என கவலையா.? 2 நிமிடங்களில் பான் கார்ட் பெறுவது எப்படி.?

நிரந்தர கணக்கு எண் என அழைக்கப்படும் பான் கார்ட் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. வங்கி கணக்கு துவங்குவது முதல் வருமான வரி கணக்கு செலுத்துவது வரை அனைத்திற்கும் பான் கார்ட் தேவைப்படுகிறது.

மேலும் வங்கிகளில் 50,000 ரூபாய் டெபாசிட் செய்வதற்கும் பான் கார்ட் அவசியமாகிறது.இத்தனை சிறப்பு வாய்ந்த பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது.? அதனை மீண்டும் பெறுவது எப்படி.? என்பது போன்ற சந்தேகங்கள் நம் அனைவருக்கும் இருக்கும். தொலைந்து போன பான் கார்ட் பெறுவது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

பான் கார்டு ரீ ப்ரிண்ட் செய்து ஆவணமாக கிடைக்க வேண்டும் என்றால் இந்த சேவையை நேஷனல் செக்யூரிட்டி டெபாசிட்டரி லிமிடெட் நிறுவனம் வழங்குகிறது. மீண்டும் அச்சிடப்பட்ட பான் கார்டு பெறுவதற்கு இந்த இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்தால் பான் கார்டு நமது நிரந்தர முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

மின்னணு பான் கார்டு வேண்டும் என்றால் என்எஸ்டிஎல் இணையதளம் சென்று நம்முடைய ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் அதாரோடு இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஓடிபி வரும். அந்த நம்பரை உள்ளீடு செய்து பான் கார்டின் ‘pdf’ பதிவைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை ஓபன் செய்வதற்கு பிறந்த தேதியை பற்றிய விவரங்களை போதுமானது.

Next Post

#BREAKING: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறையால் காலமானார்.! அதிர்ச்சியில் திரையுலகினர்.!

Thu Jan 25 , 2024
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி இளையராஜா கல்லீரல் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவரது உடல் நாளை சென்னை கொண்டுவரப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. 1984 ஆம் வருடம் வெளியான மைடியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பவதாரணி. 2000 ஆண்டில் தமிழில் வெளியான பாரதி திரைப்படத்தில் இவர் பாடிய மயில் […]

You May Like