fbpx

சௌசௌ காயில் சட்னி இப்படி செய்து பாருங்க.? உடனே காலியாகிடும்.!?

சௌசௌ காய் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காது. குறிப்பாக குழந்தைகளை இந்த காயை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டம். ஆனால் சௌசௌ காய் சாப்பிடுவதன் மூலம் தலை முதல் கால் வரை ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றது .

சௌசௌ காயில்  இந்த மாதிரி சட்னி செய்து கொடுத்தால் சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைக்கலாம். தேவையான பொருட்கள்: சௌசௌ- 1, சின்ன வெங்காயம் – 20, தேங்காய் – அரை மூடி, பொட்டு கடலை – கால் கப், கருவேப்பிலை – சிறிதளவு, வரமிளகாய் -3, புளி – நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

முதலில் சௌசௌ காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சௌசௌ காய், சின்ன வெங்காயம், வர மிளகாய், கருவேப்பிலை, புளி, பொட்டுக்கடலை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

சௌசௌ காயில் இருக்கும் நீர் இறங்கிய பின் தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு இதனை ஆற வைத்து மிக்ஸியில் எடுத்து அரைத்தால் சுவையான குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு பிடித்தமான சௌசௌ சட்னி தயார்.

Rupa

Next Post

ரூ.5,000 செலுத்தி அங்கீகாரம் புதுப்பிக்க பிப்ரவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

Mon Jan 8 , 2024
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் […]

You May Like