fbpx

நாள்பட்ட சைனஸ் பாதிப்பை வீட்டு வைத்தியம் மூலம் எவ்வாறு தடுக்கலாம்?

இன்றைய காலக்கட்டத்தில் சைனசிடிஸ் பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோயாகிவிட்டது. காரணம் நாம் உண்ணும் உணவு முதல் நமது சுற்றுப்புறச் சூழல், காற்று மாசு போன்றவையால் நாம் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம். சைனஸ் தலைவலி என்பது மக்களை மிகவும் தொந்தரவு செய்யும் ஒன்று. தலைவலியுடன், மூக்கு, கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி வலி இருக்கும். தலை குனிந்தால் வலி ஏற்படும். இந்த வலி  அன்றைய உங்கள் செயல்பாடுகளை கூட பாதிக்கக்கூடும். அவ்வாறு சைனசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதைத் தடுக்க எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

யூகலிப்டஸ் எண்ணெய் : யூகலிப்டஸ் எண்ணெய் சைனஸ் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. இது சுவாச ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது. உங்கள் டவலில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்த்து மூச்சை உள்ளிழுக்கவும். சைனஸிலிருந்து நிவாரணம் கிடைக்கும். சிறந்த முடிவுகளுக்கு தினமும் பயன்படுத்தவும்.

நீராவி சிகிச்சை : சைனசிடிஸில் இருந்து நிவாரணம் பெற யாரிடமாவது என்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள், பதில் நீராவி எடுக்க வேண்டும் என்றுதான் கூறுவார்கள். ஆம், ஆவி பிடிப்பது சுவாச உறுப்புகளில் இருக்கும் சளியை கரைக்கும். இது சைனஸில் இருந்து பெரும் நிவாரணம் தரும். தண்ணீரை சூடாக்கி நீராவி அல்லது வெந்நீரில் குளிப்பது நல்லது.

மஞ்சள் : மஞ்சள் நம் வீடுகளின் சமையலறையில் எப்போதும் இருக்கும் ஒன்று. மஞ்சளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. சைனஸ் அறிகுறிகளுக்கு மஞ்சள் மிகவும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சைனஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது. சூடான தேநீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்கவும். இது தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற உதவும்.

Kokila

Next Post

பச்சை தக்காளி சாப்பிட்டால் இந்த நோய்கள் கிட்ட கூட நெருங்காது..!

Sat Jan 7 , 2023
பச்சை தக்காளி உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். தக்காளி இல்லாமல் சமைப்பது நினைத்துப் பார்க்க முடியாதது. சுவை மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக தக்காளி குழம்பில் சேர்க்கப்படுகிறது. சிவப்பு தக்காளியைப் போலவே பச்சை தக்காளியும் சுவையானது. அவை இரண்டிலும் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம், பொட்டாசியம், புரதம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. பச்சை தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ […]

You May Like