fbpx

சம்பளம் அதிகமாக வாங்கினாலும் சேமிக்க முடியவில்லையா.! இதை பண்ணுங்க போதும்.?!

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சம்பளம் வாங்கும் போது அவற்றை எப்படி எல்லாம் செலவு செய்ய வேண்டும், சேமிக்க வேண்டும் என்பது குறித்து பலரும் யோசித்து வைத்திருப்போம். ஆனால் சம்பளம் வாங்கிய பின்பு அந்த பணம் எங்கு சென்றது, எப்படி சென்றது என்பதை குறித்து தெரியாமல் செலவு செய்திருப்போம். அவ்வாறு செலவாகும் பணத்தை எப்படி சேமிக்கலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?

நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து செலவு செய்யும் போது என்னென்ன செலவு செய்கிறோம். எவ்வளவு பணம் செலவாகிறது என்பதை குறித்து தனியாக எழுதி வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு எழுதி வைத்துக் கொள்ளும்போது தேவையில்லாத செலவுகளை அடுத்த மாதம் குறைத்துக் கொள்ள முடியும். புதிது புதிதாக கடன்களை வாங்கி குவிக்காமல் இருக்கும் பணத்தை வைத்து செலவு செய்து சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

சம்பாதிக்கும் பணத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை வீட்டு செலவிற்கும், ஒரு பகுதியை கடன் அல்லது தனிப்பட்ட செலவிற்கும் மற்றுமொரு பகுதியை சேமிப்பிற்கும் வைத்துக்கொள்ள வேண்டும்.  இதுபோக காப்பீட்டு திட்டங்கள் மற்றும் வங்கிகளில் பணத்தை சேமிக்கலாம். திடீர் அவசர செலவுகள் மற்றும் சுப காரியங்களுக்கு யாரிடமும் கடன் வாங்காமல் சேமித்த பணத்திலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆடம்பர செலவுகளான சுற்றுலா செல்வது, நகைகள் வாங்குவது, தியேட்டர்களுக்கு செல்வது, ஹோட்டல்களில் சாப்பிடுவது போன்றவற்றை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். செலவுகள் செய்யும் போது சேமித்த பணத்திலிருந்து செய்ய வேண்டும். யாரிடமும் கடன் வாங்க கூடாது. எத்தகைய சூழ்நிலையிலும் கடன் வாங்குவது என்பது மேலும் மேலும் சுமை பெருகிக் கொண்டே தான் செல்லும். இதுபோன்ற ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சேமிப்பை பெருக்கலாம்.

Rupa

Next Post

அதிமுக பைல்சா? நீங்க வெளியிடுங்க!… நான் பதில் சொல்ல முடியாது!… எஸ்கேப் ஆன அண்ணாமலை!

Wed Jan 24 , 2024
அதிமுக பைல்ஸை எப்போது வெளியிடுவீர்கள் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை, நீங்கள் கேட்ட கேள்வி ஒரு நல்ல கேள்வி. நீங்கள் ஏன் அதை செய்யவில்லை என்று மலுப்பிவிட்டு பதிலளிக்காமல் சென்றது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைப்பயண நிகழ்வுக்காக கும்பகோணம் சென்றபோது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி வாயில் வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் […]

You May Like