fbpx

உங்கள் சொந்த இடத்தில் அரசின் இ-சேவை மையம்‌ தொடங்குவது எப்படி…? அவசியம் தெரிஞ்சுக்கோங்க….!

தமிழ்நாட்டில்‌ அனைத்து குடிமக்களும்‌ இ-சேவை மையம்‌ தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும்‌, தொழில்‌ முனைவோர்களையும்‌ ஊக்குவிக்கும்‌ வகையில்‌ இ-சேவைமையம்‌ இல்லாத பகுதிகளில்‌ இ-சேவைமையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம்‌ துவங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்‌ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன்‌ வழங்கும்‌ சங்கங்கள்‌, தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம்‌,மீன்வளத்துறை, மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர்‌ மூலம்‌ மக்களுக்கான அரசின்‌ சேவைகளை, அவர்களின்‌ இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும்‌, மின்னணு சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம்‌ வாயிலாகவும்‌ வழங்கி வருகின்றது.

இதை மேம்படுத்தும்‌ வகையில்‌ தமிழ்நாடு மின்‌ஆளுமை முகமையானது, இத்திட்டம்‌ மூலம்‌ தற்போது அனைத்து குடிமக்களும்‌ இ-சேவை மையங்கள்‌ தொடங்கி பொதுமக்களுக்கான அரசின்‌ இணையவழி சேவைகளை அவர்களின்‌ இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்‌ நோக்கமானது, இ-சேவை மையங்களின்‌ எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில்‌ மக்கள்‌ காத்திருக்கும்‌ நேரத்தை குறைத்து,மக்களுக்கு சிறந்த மற்றும்‌ நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்‌.

விண்ணப்பிக்கும் இணையதளம்

https://www.tnesevai.tn.gov.in/

https://tnega.tn.gov.in/

Vignesh

Next Post

ஆன்லைன் சூதாட்டம்!... சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அதிரடி!

Thu Mar 23 , 2023
ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கும் வகையில் அவ்விளையாட்டுகளை வடிவமைக்கும் இணையதளங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா? என நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், திறமையின் அடிப்படையிலான விளையாட்டு […]

You May Like