பெண்களுக்கு பளபளப்பான முகம் மற்றும் சருமத்திற்கு மிகவும் உதவிகரமாக இருப்பது கற்றாழை. இதில் ஜிப்ரலில் என்ற தாவர வளர்ச்சி ஊக்கிகள் இருப்பதால், முகத்தில் புதிய செல்களை ஏற்படுத்த கற்றாழை உதவியாக இருக்கிறது. அத்துடன், இது சருமத்தை சுத்தம் செய்கிறது. பரபரப்பான வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக, பெண்கள் பலருக்கும் முகத்தில் பலவிதமான சரும பிரச்சனைகள் இருக்கின்றன. முகப்பருவில் ஆரம்பித்து, சுருக்கம், கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள், வறட்சி என்று எல்லா விதமான சரும பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக கற்றாழை இருக்கிறது.
இந்த முகப்புள்ளிகளில் இருந்து, நிவாரணம் பெறுவதற்கு, எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து, பேஸ்ட் தயார் செய்ய வேண்டும். அதேபோல முகப்பருவுக்கு, கற்றாழையுடன் விட்டமின் ஈ கேப்சூல் சேர்த்து, பயன்படுத்தலாம். இப்படி பலவிதமான முறைகளில் சரும பிரச்சனைக்கு கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது நன்று. அந்த விதத்தில், இந்த பதிவில் கற்றாழை ஜெல்லை முகத்தில் எப்படி பயன்படுத்தலாம்? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, நன்றாக கலக்கி, முகத்தில் தடவி, பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதேபோல, இரவு உறங்குவதற்கு செல்வதற்கு முன்பாக, கற்றாழை ஜெல்லை, பிரஷ்ஷாக எடுத்து, முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். காலை எழுந்தவுடன், முகத்தை கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும். முகச்சுருக்கங்களின் காரணமாக, அவதியுற்று வந்தால், காற்றாழை ஜெல்லுடன், தேங்காய் எண்ணெய், தேன் உள்ளிட்டவற்றை சேர்த்து, முகத்தில் தடவி வரவும். இது முக சுருக்கங்களை வெகுவாக குறைக்கும்.