fbpx

அமோக வெற்றி..!! ஜூன் 9ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு..?

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்திற்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து களம் கண்டது. மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 130-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. கூட்டணி கட்சியான ஜனசேனா 20 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

அதே நேரம், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. எனவே, தேவையான இடங்களுக்கு மேல் தெலுங்கு தேசம் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராவது உறுதியாகி உள்ளது. சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9ஆம் தேதி அமராவதியில் பதவியேற்க உள்ளதாகவும் இந்த பதவியேற்பு விழாவில் மோடி கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Read More : தேர்தல் முடிவு தலைகீழாக மாற ஷாருக்கான் தான் காரணமா..? வைரலாகும் பதிவு..!!

English Summary

The Telugu Desam Party won the Andhra Assembly elections by winning more than 130 seats.

Chella

Next Post

Lok Sabha election Results 2024 : தமிழ்நாட்டின் தொகுதிவாரி தேர்தல் முடிவுகளின் முழு விவரம் இதோ..!!

Tue Jun 4 , 2024
english summaray

You May Like