இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்களை ராணுவம் அரங்கேற்றியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் அதிபரும், உள்நாட்டுப் போரின்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவருமான கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.

இதேபோல, 2000இல் மிழர்களை படுகொலை செய்ததாக மரண தண்டன விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி சுனில் ரத்னாயகே, கடற்படை கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி ஆகியோருக்கும் கனடா அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையின்படி, இந்த 4 பேரும் கனடாவுடன் நிதி பரிமாற்றங்களில் ஈடுபடக்கூடாது. கனடாவுக்குள் நுழையவும் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்களின் போராட்டத்தால் கோத்தபய ராஜபக்சே, மகிந்தா ராஜபக்சே ஆகியோர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.