கோவில்பட்டி பகுதியில் பெருமாள் நகரை சேர்ந்த ராஜபாண்டி (45) என்ற கொத்தனார்க்கு பரணிசெல்வி (40 ) என்ற மனைவி இருந்துள்ளார். பரணிச்செல்வி லாயல் மில் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றார். இவர்களுக்கு மனோஜ் என்ற ஒரு மகனும் உமா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த ஜூலை மாதத்தில் பெருமாள் நகரில் புதிதாக ஒரு வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளனர். கணவன் மற்றும் மனைவி ஆகியோர் இடையே, வீடு கட்டியதற்கு வாங்கிய கடனால் சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் மகள் உமா வெளியேயும், மகன் மனோஜ் பெட்டி கடைக்கும், சென்றுள்ளனர்.
இச்சமயத்தில் மனோஜ் வீட்டிற்கு திரும்ப வந்த நிலையில் கதவுகள் உள்பக்கமாக பூட்டியிருந்தது. மேலும் வெகுநேரமாகியும் கதவுகள் திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த மனோஜ் அவரின் பெற்றோர்களுக்கு தொடர்பு கொண்டார். இருவரும் செல்போனை எடுக்கவில்லை.
இதையடுத்து மனோஜ் அக்கம்பக்கத்தினரிடம் தகவலை தெரிவித்ததுடன், போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பரணி செல்வி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கட்டிலில் இறந்து கிடந்தார். மற்றும் ராஜபாண்டியும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கீழே சடலமாக கிடந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்ததில், சில தினங்களாக தம்பதியருக்குள் இடையே நடந்த சண்டையில் மனைவி பரணி செல்வியின் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு, மேலும் தானும் கழுத்தை அறுத்து தற்காலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.