fbpx

கோழிக்கறி குழம்பு கேட்ட கணவன்..!! கத்தரிக்காய் குழம்பு ஊற்றிய மனைவி..!! கோடாரியால் தலையை துண்டாக்கிய அதிர்ச்சி..!!

தெலங்கானா மாநிலம் மஞ்சரியாலா மாவட்டம் சென்னூரு மண்டலம் கிஷ்டம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் போஷம். இவர், கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கரம்மா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர் வழக்கம் போல் பணிக்குசென்றுவிட்டு வந்ததும் போஷம் தனது மனைவியிடம் கோழி கறி குழம்பு வைக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு வெளியே சென்றுள்ளார். வெளியில் சென்று மது போதையில் வீட்டிற்கு வந்த போஷம், சாப்பிடுவதற்காக கோழிக்கறி குழம்பு கேட்டுள்ளார்.

ஆனால், சங்கரம்மா கத்தரிக்காய் குழம்பு ஊற்றியதால் அவர் ஆத்திரம் அடைந்தார். இதனால் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நள்ளிரவில் சங்கரம்மா வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து சங்கரம்மா தலையில் பலமாக வெட்டியுள்ளார் போஷம். இதில் தலை இரண்டாக பிளந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சங்கரம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி வெட்டிக் கொலை செய்த பிறகு போஷம் அங்கிருந்து தப்பி சென்றார்.

காலை நீண்ட நேரம் ஆகியும் சங்கரம்மா வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சங்கரம்மாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள போஷத்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கல்லூரி முடித்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு பள்ளி மாணவியையும் கர்ப்பமாக்க முயன்ற இளைஞர்..!! இன்னும் லிஸ்ட் இருக்காம்..!!

Sat Jul 15 , 2023
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கல்லூரி முடித்துவிட்டு போலீஸ் வேலைக்காக படித்து வருகிறார். மேலும், ஆரணி அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசனின் மகன் ஆகாஷ் (24) கல்லூரி முடித்துவிட்டு, சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் காவல்துறை வேலைக்கு நடந்த ஓட்ட பயிற்சியின்போது, இளம்பெண்ணுடன் ஆகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து […]
கல்லூரி முடித்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு பள்ளி மாணவியையும் கர்ப்பமாக்க முயன்ற இளைஞர்..!! இன்னும் லிஸ்ட் இருக்காம்..!!

You May Like