உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பெண்ணுடன் உறவு வைத்த இளைஞன் இரவு நேரம் வீட்டு மொட்டை மாடியில் அந்த பெண்ணை தனியாக சந்தித்தான்.. இருவரும் ரொமன்ஸ் செய்து கொண்டிருந்த போது பெண்ணின் கணவரும் அவரது குடும்பத்தினரும் கையும் களவுமாக பிடித்தனர். அவரை அடித்து உதைத்து தாக்கினர்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த நபர் தான் இனி இங்கே வரவே மாட்டேன்.. என்னை மன்னித்து விடுங்கள் என கெஞ்சினான்.. இருப்பினும், பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த நபரை கடுமையாக தாக்கினர். குச்சிகள் மற்றும் பெல்ட்களால் தாக்கும் காட்சியை அங்குள்ள நபர் செல்போனில் வீடியோவாக எடுத்து, இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இந்த தாக்குதலின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து சம்மத்தப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.