fbpx

#கள்ளக்குறிச்சி: மது போதைக்காக கணவர் செய்த செயல்.. விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு..!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏமாப்பேரை என்ற பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் என்பவர். இவர் தனது தாய் மற்றும் மனைவி நளினியுடன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு மிகவும் அடிமையான வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் பாலகிருஷ்ணன். அத்துடன் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவி மற்றும் தாயை தொந்தரவு செய்துள்ளார். 

சம்பவம் நடைபெற்ற அன்று பணம் கேட்டு இருவரும் குடுக்காததால் மது குடிப்பதற்கு பணம் இல்லாத நிலையில் பாலகிருஷ்ணன் தனது மனைவியின் கழுத்தில் கிடந்த தாலியை பறித்து சென்றுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் நளினி தனது வீட்டிலேயே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோர் குடுத்த புகாரின் பேரில், வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

சூப்பர் அறிவிப்பு..!! இந்த பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ்..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

Sun Jan 8 , 2023
பொங்கல் போனஸ் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு துறையில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகையாக […]

You May Like