விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகள் பாரதி, (23) . இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சூரக்கோட்டையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கணவரை பிரிந்த பாரதி, வீரங்கிபுரத்தில் பாட்டி லட்சுமியுடன் தங்கி இருந்தார். பாட்டி வீட்டில் தங்கி இருந்த போது அங்கே வசிக்கும் செல்வபாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மூன்று மாத கர்ப்பிணியானார்.
இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கடந்த 21ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பாரதி கர்ப்பமாக இருப்பதற்கு தான் காரணம் இல்லை எனக்கூறி செல்வபாண்டியன் பாரதியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.
இதனால் பாரதியின் உடல்நிலை மோசமடைந்து, சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். நேற்று, ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை, பத்து மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பாரதியின் தந்தையான சந்திரசேகர் (51) , கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.