fbpx

கறி வறுத்த மனைவி., கடுப்பாகி கணவன் செய்த செயலால் பறிபோன உயிர்.!

ஆமைக்கறி வறுவல் லேசாக கருகி விட்டது என்பதற்காக மதுபோதையில் மனைவியை அடித்து கொன்று புதைத்த கணவன் செய்த செயல் ரவுத்பாரா கிராமத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

ரஞ்சன் பாடிங் என்பவர் ஒடிசா மாநிலத்தில் சம்பால்பூர் மாவட்டம் ரவுத்பாரா கிராமத்தில் அவரின் மனைவி சாவித்திரியுடன் வசித்து வந்தார் . சில தினங்களாக தன் மனைவி காணாமல் போய்விட்டதாக சொல்லி வந்திருக்கிறார். இந்நிலையில், தன் மகளுக்கு என்ன ஆனது என்று விசாரணை நடத்தி மகளை கண்டுபிடித்து தரக் கோரி பெண்ணின் தாய் போலீசில் புகார் அளித்திருக்கிறார் .

போலீசார் சாவித்திரி குறித்து விசாரிப்பதற்காக ரஞ்சன் பாடிங்கை அழைத்து இருக்கிறார்கள். அப்போது ரஞ்சன்பாடிங் தப்பி ஓடி இருக்கிறார். அதனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது . தீவிர தேடலில் ரஞ்சன் பாடிங்கை பிடித்து விசாரித்த போது அவர் அளித்த பதில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மது அருந்திவிட்டு ஆமை கொண்டு வந்து மனைவியை சமைத்து தரும்படி கேட்டு இருக்கிறார்.

ஆமைக்கறியை சாவித்திரி வறுத்தபோது லேசாக கருகி இருக்கிறது. மது போதையில் இருந்த ரஞ்சன் பாடிங், ஆத்திரம் அடைந்து சாவித்திரியை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் மயங்கி மயக்கம் அடைந்து கீழே விழுந்திருக்கிறார் சாவித்திரி. பின்னர் ரஞ்சன் வீட்டை விட்டு வெளியே சென்று வெகுநேரம் கழித்து வீட்டிற்கு திரும்பியிருக்கிறார்ல். அப்போது கீழே விழுந்து கிடந்த மனைவி அப்படியே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து தூக்கி பார்த்தபோது அவர் உயிரிழந்து இருப்பது தெரியவந்திருக்கிறது.

அதனை யாருக்கும் சொல்லாமல் வீட்டிற்கு பின்புறத்திலேயே குழி தோண்டி புதைத்திருக்கிறார். மனைவியை பற்றி பலரும் கேட்கும் பட்சத்தில், மனைவிக்கும் தனக்கும் சண்டை அதனால் அவள் வீட்டை விட்டு போய்விட்டாள் என்று கூறி எல்லோரிடமும் சொல்லி நம்ப வைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து, ரஞ்சன் சொன்ன இடத்தில் குழி தோண்டி சாவித்திரியின் உடலை நேற்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். மேலும், சாவித்திரியை கொலை செய்த ரஞ்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Rupa

Next Post

சூரிய கிரகணம் : திருவண்ணாமலை கோயில் திறந்திருக்கும்...

Sat Oct 22 , 2022
சூரிய கிரகணம் நாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு அடுத்த நாளான 25ம் தேதி சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. மாலை 5.10 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிரகணம் நிகழும் நாளன்று பொதுவாகவே கோயில்கள் அனைத்தும் அடைக்கப்படும். திருப்பதி […]

You May Like