fbpx

பரோலில் வெளிவந்த கணவன்..!! மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு திரும்பிய பின்னணி..!!

பஞ்சாப் மாநிலம் தன் தரன் என்ற பகுதியில் சிம்ரன் கவுர் சிம்மு (40) என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது சகோதரி ஹர்மித் கவுர் என்பவரும் ஒரே குடும்பத்தில் இருக்கும் சகோதரர்களை திருமணம் செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில், சிம்முவின் கணவரான பல்ஜிந்தர் சிங் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டது. இதனால், பல்ஜிந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் ஜஸ்பிரீத் சிங் ஆகிய இருவரும் கொலை குற்றவாளிகளாக கருதப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் சிறையில் இருக்கும் நிலையில், பல்ஜிந்தர் சிங் பரோலில் தனது குடும்பத்தை காண வந்துள்ளார்.

ஆனால், பல்ஜிந்தர் சிங்கின் மனைவி சிம்மு, மாறுதலாக நடந்துள்ளார். இதனால் அவரது நடவடிக்கையில் கணவர் சந்தேகம் கொண்டுள்ளார். மேலும், தன்னை தவிர்த்து வேறு ஒருவரை காதலிப்பாரோ என்ற சந்தேகத்தில் அவரிடம் நேக்காக கேள்வி கேட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிப்போகவே, பல்ஜிந்தர் சிங் அருகில் இருந்த கூர்மையான பொருளை கொண்டு மனைவியை தாக்கியுள்ளார். இதில் அவர் கத்தி கூச்சலிடவே, அந்த சமயத்தில் வந்த சிம்முவின் தாயார் இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் தலை, கழுத்து என உடல் முழுவதும் இரத்த காயங்களுடன் சிம்மு மயக்க நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து தாயார் போலீசுக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பல்ஜிந்தர் சிங்கை கைது செய்தனர். தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த சிம்முவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடலை உடற்கூறாய்வு செய்து பின்னர், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறையில் இருந்து பரோலில் வந்த கணவர் மனைவி மீது சந்தேகப்பட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் விற்கப்பட்ட விவகாரம்…..! மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அதிரடியாக மாற்றியது தமிழக அரசு…..!

Sun May 21 , 2023
சென்ற வாரம் மதுராந்தகத்தில் கலாச்சாராயத்தை குறித்து 8 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது மதுராந்தகம் டிஎஸ்பியாக இருந்த மணிமேகலை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அதன் காரணமாக, பழனியைச் சேர்ந்த சிவசக்தி மதுராந்தகம் காவல்துறை துணை […]

You May Like