கணவன் ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும், பராமரிக்க முடியாத மனைவியைப் பராமரிக்கும் தார்மீக மற்றும் சட்டப் பொறுப்பு அவருக்கு உள்ளது என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் கீழமை நீதிமன்றத்தில் பெண் ஒருவர் விவாகரத்து கோரியும், தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்து திருமணச் சட்டத்தின் கீழ் மனுவும் தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் மாதம் பராமரிப்பு செலவுக்காக ரூ.15,000 பராமரிப்பு மற்றும் வழக்கு செலவு ரூ.11,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவர் தனது மனைவிக்கு பராமரிப்புத் தொகையாக மாதம் 5,000 ரூபாயும், வழக்குச் செலவுக்காக மொத்தம் 5,500 ரூபாயும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மதன், கணவர் உடல் தகுதியுள்ளவர் என்றும், கூலித் தொழிலாளி கூட நாள் ஒன்றுக்கு ரூ. 500 சம்பாதிப்பதாகவும், அடிப்படைத் தேவைகளின் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு கீழ் நீதிமன்றம் நிர்ணயித்த தொகை மிகையாகாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ” கணவன் ஒரு திறமையான நபர், இப்போதெல்லாம், கூலி தொழிலாளி கூட ஒரு நாளைக்கு ரூ. 500/- அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கிறார்… விலைவாசி உயர்வு மற்றும் அடிப்படைத் தேவைகள் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, வழங்கப்பட்ட பராமரிப்பு உயர் தரத்தில் இருப்பதாகக் கூற முடியாது” என்று நீதிபதி மதன் குறிப்பிட்டார்.
கணவரின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், மனைவியைப் பராமரிப்பது கணவனின் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ பொறுப்பு என்று நீதிபதி தெரிவித்தார்.. மேலும் “ நிச்சயமாக ஒரு கணவனுக்குத் தன் மனைவியைப் பராமரிக்க முடியாத தார்மீக மற்றும் சட்டப்பூர்வ பொறுப்பு உள்ளது..” என்று தெரிவித்தார்..