கடவுளின் படைப்புகளிலேயே மிக அற்புதமான படைப்பு. உலகத்தில் விலைமதிப்பற்ற புதிய உயிர் கொண்டுவரக்கூடிய ஆற்றல் ஆண்களின் வீரத்திற்கும், இனப்பெருக்கத்திற்கு முக்கிய பெருமை சேர்ப்பது இந்த விந்துணு ஆகும். ஆண்களுக்கு சுரக்கக்கூடிய டெஸ்டோஸ்டெரோன் மற்றும் போலிக் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் இரண்டும் விந்தணுக்களை உற்பத்தி செய்ய மிக மிக இன்றியமையாததாகும். விந்தணுக்கள் உற்பத்திற்கு தேவையான மற்றும் முக்கியமான ஹார்மோன்கள், மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி ஆரோக்கியமான முறையில் செயல்படுவது மிக மிக அவசியமாகும்.
அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் கண்டிப்பாக ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தி மிக குறைவாக இருக்கும். இதனால் ஆண்களுக்கு குறைந்த விந்தணு எண்ணிக்கை (Low Sperm Count) இருக்கும். விந்தணுக்களின் தரம் மற்றும் விந்தணுக்கள் உற்பத்தியில் உயிர் அணுக்கள் இல்லாத விந்து திரவம் காணப்படும். அதில் ஆரோக்கியமற்ற உயிர் அணுக்கள், அவைகளின் அளவு, நீந்தும் வேகம், அணுக்களின் செயல்பாடுகள் எல்லாமே அசாதாரணமாக இருப்பதால், குழந்தை பெற்றுக்கொள்வதில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீனிய கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கைதிகளின் மனைவிகள் தங்களது கணவனின் விந்தணுக்களை மறைமுகமாக பெற்று அதன் மூலமாக கருவுறும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதனை அந்த நாடு எதிர்க்கும் நிலையில், அந்நாட்டில் இருக்கும் பாலஸ்தீனிய மதகுருக்கள் ஆதரவு தெரிவித்து இவ்வாறான நடைமுறைகளை ஊக்குவிப்பதாக தெரிய வருகிறது. மேலும் இதுபோன்று பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் அரசால் சட்ட விரோதமானவை என அறிவிக்கப்பட்டாலும், இஸ்ரேலில் உள்ள சிறைகளில் இருந்து விந்தணு கடத்தல் நடந்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.